கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சிம்ரன் தனது கணவரின் தயாரிப்பில் “தி லாஸ்ட் ஒன்” என்கிற திரைப்படத்தில் நடித்த இருப்பதாக தகவல் அறிக்கையோடு கூடிய புதிய போஸ்டர் ஒன்றுடன் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
இது குறித்து பிரபல YouTube சேனலான வலைப்பேச்சு சேனலில் அந்தகன், பிஸ்மி மற்றும் சக்திவேல் ஆகியோர் குழுவாக சேர்ந்து சிம்ரனை குறித்து வதந்திகளை பேசியிருந்தார்கள். அவர்கள் பேசியதாவது அசல் ஊர் காரன் என்றால் ஆழம் தெரியாமல் காலை விடுவான். ஆனால் உள்ளூர் காரனுக்கு ஆழம் தெரியும். அது போல நிறைய பேருக்கு தெரிய மாட்டேங்குது.
சினிமா தயாரிக்கிறேன்னு சொல்லிட்டு நடிகர் நடிகைகள் எல்லாம் வராங்க இங்க வந்தா எவ்வளவு அவசரப்பட வேண்டும் என்பது அவர்களுக்கு புரியவில்லை. வெளியில் இருந்து பார்ப்பது வேறு அதேபோல் நடிகர் நடிகைகள் ஹீரோ ஹீரோயினாக சினிமாவை பார்க்கும்போது வேறு மாதிரி இருக்கும்.
அவர்களுக்கு ஜூஸ் கொடுக்கறதுக்கு ஷூ போடுவதற்கு எல்லாமே ஆட்கள் இருப்பார்கள். அவர்களே ப்ரொடியூசர் ஆகா மாறும்போது தான் சினிமா வேற மாதிரி இருக்கிறது என்பதை அவர்களுக்கு புரிய வரும். இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது இதெல்லாம் தெரியாத சிம்ரன் சமீபத்தில் விஜய் இடம் சென்று சார் உங்களை வைத்து படம் தயாரிக்க விரும்புகிறேன் நீங்க எனக்கு டேட் கொடுப்பீங்களா என்று கேட்டிருக்கிறார் .
ஆனால், விஜய் ரொம்ப அழகாக எதார்த்தத்தை எடுத்துச் சொன்னாராம். எப்பவுமே என்னுடைய படம் ரிலீஸ் ஆகும்போது ஏகப்பட்ட சிக்கல்கள் வரும். அதையெல்லாம் நீங்க தாங்க மாட்டீர்கள். பிரச்சனைகள் எங்கிருந்து வரும் என்றே தெரியாது என கூறிவிட்டு நீங்க ஹேப்பியா இருங்க என்று சொல்லி அனுப்பி வைத்தாராம்.
இப்படி ஒரு வதந்தி செய்தியை தனது சமூக வலைத்தள பக்கமான YouTube’ ல் வெளியிட்டு இருக்கிறார்கள் இதை கண்டித்து நடிகை சிம்ரன் வலைப்பேச்சு யூடியூப் தளத்தை கடுமையாக திட்டி ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
மக்கள் உங்களை எப்படி உணர்ச்சிப்பூர்வமாக கையாள முடியும் என்பதையும், உங்கள் நண்பர்கள் அதைப் பற்றி எவ்வளவு குறைவாகவே அக்கறை காட்டுகிறார்கள் என்பதையும் பார்ப்பது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. இப்போது வரை, நான் அமைதியாக இருந்தேன். ஆனால் நான் தெளிவுபடுத்துகிறேன்: நான் எந்த பெரிய ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படவில்லை. நான் அங்கு சென்று அதை செய்திருக்கிறேன். எனது இலக்குகள் இப்போது வேறுபட்டவை, ஒரு பெண்ணாக, எனது எல்லைகளை நான் அறிவேன்.
பல ஆண்டுகளாக, எனது பெயர் சமூக ஊடகங்களில் தோன்றியபோது, எனது பெயர் ஒன்று அல்லது இன்னொருவருடன் இணைக்கப்பட்டபோது நான் அமைதியாக இருந்தேன். ஆனால் சுயமரியாதை முதலில் வருகிறது. “நிறுத்து” என்பது ஒரு சக்திவாய்ந்த வார்த்தை, அது இங்கே சரியானது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எவரும் முயற்சி செய்யவில்லை. என் உணர்வுகளைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.
இதையும் படியுங்கள்: உயிர் – உலக் உடன் ஜாலி ட்ரிப் அடித்த நயன்தாரா – லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு குவியும் லைக்ஸ்!
நான் என் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை; நான் எப்போதும் சரியானவற்றில் உறுதியாக நின்றேன். தொழில்துறையில் உள்ள விவேகமானவர்களிடமிருந்தும் அதே நேர்மையை எதிர்பார்க்கிறேன். பொய்யான வதந்திகளை பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காட்டமாக பதிவிட்டுள்ளார். இதையடுத்து சிம்ரனுக்கு பலரும் ஆதரவு குரல் கொடுத்து வருகிறார்கள்.