இன்னும் டைம் ஆகும் தம்பி.. ஓடிடிக்கு டாடா காட்டிய அமரன்!

Author: Hariharasudhan
12 November 2024, 12:44 pm

அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால், ஓடிடி ரிலீஸ் தேதியை தள்ளிப்போட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: அமரன் படம் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது. சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட்டாக மாறி உள்ள இந்தத் திரைப்படம், அவரது வணிக மதிப்பையும் கூட்டியுள்ளது என்றே சொல்லலாம். இந்த நிலையில், மேலும் ஒரு சாதனையையும் சிவகார்த்திகேயன் படைத்திருக்கிறார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான திரைப்படம், அமரன். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று பயோபிக் படமாக உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

44வது ராஷ்டிரிய பட்டாலியன் ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று, காதல் மற்றும் இல்லற வாழ்க்கை, நாட்டுக்காகத் தியாகம் செய்து அடைந்த வீர மரணம் ஆகியவை சினிமாவுக்கு ஏற்றார் போன்று மாற்றப்பட்டு, ரசிகர்களுக்கு திரை விருந்தாக அளிக்கப்பட்டு உள்ளது.

Sivakarthikeyan

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியான இப்படம், எஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரை உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இதுவரை 280 கோடி ரூபாய் உலக அளவில் மொத்தமாக வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ரஜினி, விஜய்யை முந்திய சூர்யா : அப்போ ரூ.1000 கோடி அசால்ட்டா?

இந்த நிலையில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, படம் வெளியாகி 28 நாட்களுக்குள் ஓடிடி தளத்தில் அமரன் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருந்து உள்ளது.

ஆனால், திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் அமரன் ஓடி வருவதால், ஓடிடி ரிலீஸ் தேதியை இன்னும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, டிசம்பர் 11ஆம் தேதி அமரன் ஓடிடியில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!