SK 24; பூஜையுடன் இணைந்த டான் கூட்டணி.. டைட்டில் என்ன தெரியுமா?

Author: Hariharasudhan
28 November 2024, 12:45 pm

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 24 படத்தின் பூஜை சென்னையில் நடந்துள்ளது.

சென்னை: அமரன் என்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ப்ளாக்பஸ்டர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். SK 23 எனத் தற்காலிக தலைப்பிடப்பட்டு உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் – சிபி சக்கரவர்த்தி – அனிருத் என்ற அதே டான் காம்போ இணைய உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், SK 24 எனத் தற்காலிக தலைப்பிடப்பட்டு உள்ள இப்படத்தின் பூஜை சென்னையில் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்ததாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் முதலில் மீனாட்சி செளத்ரி நாயகியாக களமிறக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனாவின் பேச்சு அடிபடுகிறது.

Sivakarthikeyan join again with cibi chakravarthy

இந்தப் படத்தை மகாராஜா, பார்க்கிங் உள்ளிட்ட படங்களை தயாரித்த சுதன் சுந்தரம் தயாரிக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் எனக் கூறப்படுகிறது. மேலும், இதனைத் தொடர்ந்து, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் SK 25 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

இதையும் படிங்க: இந்த வாரம் களைகட்டும் ஓடிடி ரிலீஸ்.. இன்னைக்கு மட்டும் இத்தனை படங்களா?

அது மட்டுமல்லாமல், இப்படத்தில் ஜெயம் ரவி சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாகவும், அதற்கு பல கண்டிஷன்களை ஜெயம் ரவி போட்டு உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், தீபாவளித் திருநாளில் வெளியான அமரன் படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, சிவாவின் சினிமா வணிகத்தை உயர்த்தி உள்ளது.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 197

    0

    0