நடிகர் தனுஷின் திரைப்பட கெரியரில் மிக முக்கிய திரைப்படமாக பார்க்கப்பட்ட படம் தான் புதுப்பேட்டை. இந்த திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்து தமிழ் சினிமாவையே ஒரு உலுக்கு உலுக்கியது என்று சொல்லலாம் .
இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சோனியா அகர்வால் மற்றும் சினேகா இருவரும் நடித்திருப்பார்கள். இந்த கதாபாத்திரங்கள் இரண்டுமே மிகவும் முக்கியமானதாக படத்திற்கு பார்க்கப்பட்டது .
செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். யுவனின் இசை மிகப்பெரிய பலமாக படத்திற்கு அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படம் வெளியானபோது தமிழ்நாட்டின் 162 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
சென்னையில் வசூலில் முதலிடத்தை வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் திரையரங்களில் வெளிவந்த இந்த திரைப்படம் ரூ. 3 கோடி ரூபாய் வரை அப்போதே வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்தது. இதுநாள் வரை இந்த திரைப்படத்திற்காக ரசிகர்களின் எதிர்பார்ப்பே தனி தான் .
இந்த திரைப்படத்தில் நடிகை சினேகா விலைமாதுவாக நடித்திருப்பார். அந்த சமயத்தில் சினேகா அப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நொடித்தது மிகப்பெரிய அளவில் பேசு பொருளானது. காரணம் அந்த சமயங்களில் சினேகா மிகவும் ஹோமிலியான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர்.
அந்த சமயத்தில் திடீரென விலைமாது கேரக்டரில் நடித்ததை மக்கள் விமர்சித்து தள்ளினார்கள். ஆனாலும் அந்த கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானதாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் மிகவும் அசிங்கமாகவோ கொச்சைப்படுத்தும் படியோ அந்த கதாபாத்திரத்தை செல்வராகவன் சித்தரிக்கவில்லை.
இந்த நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடித்த அனுபவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சினேகா இயக்குனர் செல்வராகவன் சார் இந்த படத்தோட கதையும் என்னோட ரோலையும் என்கிட்ட முதல்ல சொன்ன உடனே படத்துல நடிக்கலாமா வேண்டாமா என்ற ஒரு தயக்கம் தான் என்கிட்ட இருந்துச்சு.
ஆனால் என்னோட அப்பா அந்த படத்தோட கதையை சொல்லும்போது என் கூட தான் இருந்தாரு. அப்போ அவர்தான் என்னை இந்த திரைப்படத்தில் நடிக்கவே சொன்னார். ஏனென்றால் எத்தனையோ ஹிந்தியில் ஹார்ட்டிஸ்ட் இந்த மாதிரி கேரக்டர் ஏற்று நடித்திருக்காங்க. அது மட்டும் இல்லாமல் இயக்குனர் சார் சொன்ன விதத்தை பார்த்தால் உன்னுடைய கேரக்டரை அவர் தவறாக காண்பிக்க மாட்டார் என்று தான் எனக்கு தோன்றுகிறது.
எனவே இந்த கேரக்டரில் நடிக்க என்னுடைய அப்பா பர்மிஷன் கொடுத்தார். என்னுடைய அப்பா அப்படி சொன்னது எனக்கு மிகப்பெரிய விஷயமாக தோன்றியது. ஏனென்றால் அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆனவர். அவரே அப்படி சொல்லும்போது இயக்குனர் அந்த திரைப்படத்தை தவறாக சித்தரிக்க மாட்டார் என்ற ஒரு எண்ணம் எனக்குள் வந்து. நான் அந்த திரைப்படத்தில் நடித்தேன் படம் வெளியாகி நல்ல பெயரும் புகழும் எனக்கு கிடைத்தது. ஒரு வித்தியாசமான சினேகாவை அந்த படத்தின் மூலமாக ரசிகர்கள் பார்த்தார்கள் என சினேகா அந்த பேட்டியில் கூறினார்.