கமல் ஹாசன் எப்போவோ போயிருக்கணும் – விஜய் சேதுபதி Best – ஓப்பனா கூறிய சினேகன்!

Author:
13 November 2024, 1:19 pm

கமல் எப்போவோ போயிருக்கணும்:

நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக தொடர்ச்சியாக தொகுத்து வழங்கி வந்த நிலையில் திடீரென 8-வது சீசனை தான் தொகுத்து வழங்கப் போவதில்லை எனக்கூறிய அதிரடியாக வெளியேறினார் .

Kamal - Update News 360

அதை எடுத்து விஜய் சேதுபதி அந்த இடத்திற்கு வந்து சிறப்பாக தன்னுடைய பணி செய்து வருகிறார். நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சினேகனிடம் இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அவர் தெளிவான விளக்கத்தையும் தெரிவித்திருக்கிறார் .

கமல் காசுக்காக பண்ணமாட்டார்:

bigg boss kamal

அதாவது கமல்ஹாசன் இரண்டு பிக் பாஸ் முடித்துவிட்டு வெளியில் வந்து விடுவார் என நான் நினைத்தேன். ஏனென்றால் அப்போது அவர் அரசியல் வேளையில் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். இப்படி ஒரு நெருக்கடியில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டுமா? என்று கூட நாங்கள் அவரிடமே நேரடியாக கேட்டோம்.

அவர் ஒப்பந்தம் செய்தாச்சு பண்ணி தான் ஆக வேண்டும் என கூறினார். அவர் என்ன பொறுத்த வரைக்கும் காசுக்காக எந்த வேலையும் செய்ய மாட்டார்.அதற்காக காசே வாங்காமலும் அவர் வேலை செய்யும் ஆள் கிடையாது. காசுக்காக ஒரு வேலையை பார்க்க மாட்டார்.

விஜய் சேதுபதி சிறப்பா பண்றாரு:

நான் இன்னும் முன்னாடியே கமல்ஹாசன் வெளியில் வந்து விடுவார் என நினைத்தேன். ஆனால் இப்போ வெளியே வந்தது பெரிய அதிர்ச்சி எல்லாம் கிடையாது. ஏனென்றால் அவருக்கு இதைவிட அதிகமான பெரிய வேலைகள் இருக்கிறது. மேலும் விஜய் சேதுபதியின் என்ட்ரி குறித்து பேசிய சினேகன் நிரந்தரமா ஒரு ஆள் ஒரு இடத்தில் இருக்கவே முடியாது.

vijay sethupathy

ஒரு இடத்திற்கு இன்னொரு ஆள் வந்து தானே ஆகணும் ரீபிளேஸ் பண்ண ஆள் சரியான ஆள் என்று தான் நான் நினைக்கிறேன். கமல் சாரிடம் இருப்பதை விஜய் சேதுபதியிடமும் விஜய் சேதுபதி இடம் இருப்பதை இன்னொரு நபரிடமும் நாம் எதிர்பார்க்க முடியாது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கோணங்கள் இருக்கிறது அந்த கோணத்தில் அவரவர் சிறப்பாக தன் பணியை செய்து வருகிறார்கள். விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது நன்றாக இருக்கிறது என சினேகன் கூறினார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 168

    0

    0