பெண்களை மதிக்கிற மாதிரி நடிப்பாங்க; ஆனா சுயரூபமே வேற- மாளவிகா மோகனன் யாரை சொல்றாங்க?
Author: Prasad26 April 2025, 1:47 pm
கனவுக்கன்னி
தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தாலும் தமிழில் “பேட்ட”, “மாஸ்டர்”, “மாறன்”, “தங்கலான்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதில் “தங்கலான்” திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டுக்களை பெற்றது. அதனை தொடர்ந்து கார்த்தியின் “சர்தார் 2” திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மாளவிகா மோகனன், நடிகர்களை குறித்து பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ரெண்டு முகம் இருக்கு
“சில நடிகர்கள் பெண்களை மதிப்பது போல் வெளியே காட்டிக்கொள்வார்கள். ஆனால் கேமராவுக்கு பின்னால் அவர்கள் எப்படியெல்லாம் மாறுவார்கள் என்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். கடந்த 5 வருடங்களில் சினிமாவில் முகமூடி அணிந்திருக்கும் பல நடிகர்கள் சினிமாவில் இருக்கிறார்கள்” என கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
