ஷங்கருக்கு வந்த புது சிக்கல்.. Game Changer-க்கு தமிழ்நாட்டில் சோதனை!

Author: Hariharasudhan
6 January 2025, 12:58 pm

இந்தியன் 3 திரைப்படம் தொடர்பாக லைகா ஷங்கர் மீது புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், கேம் சேஞ்சர் படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண், கியாரா அத்வானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் ’கேம் சேஞ்சர்’. இப்படத்தில் அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜின் கதையால் உருவாகிய இந்த திரைப்படம், வருகிற ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் வெளியீட்டாக வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்திற்கு புதிதாக சிக்கல் எழுந்துள்ளது. காரணம், முன்னதாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் கடும் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது.

எனவே இந்தியன் 3 படத்தின் எஞ்சிய காட்சிகளை விரைவில் ஷங்கர் இயக்க உள்ளதாக தெரிகிறது. ஆனால், இந்தியன் திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு கேம் சேஞ்சர் படத்தை வெளியிடலாம் என லைகா தயாரிப்பில் கூறப்படுவதாகவும், இதனால் புகார் அளிக்க உள்ளதாகவும் லைகா நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Shankar about Indian 3

இருப்பினும், கேம் சேஞ்சர் பட வெளியீட்டுக்குப் பிறகு இந்தியன் 3 படம் குறித்து கமல்ஹாசன் உடன் கலந்து ஆலோசித்துக் கொள்ளலாம் என ஷங்கர் கூறியுள்ளதாகவும், ஆனால் அதற்கு லைகா மறுத்துள்ளதாகவும் தெரிகிறது. எனவே கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: பலூன் தான்.. ஆனால் உள்ளே எதுவும் இல்லை.. இபிஎஸ் கடும் சாடல்!

முழுக்க முழுக்க தெலுங்கு திரைப்படமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம், ஒரு அரசியல்வாதிக்கும், அரசு அதிகாரிக்கும் இடையிலான கதைக்களமாக அமைந்துள்ளதாக ஷங்கர் கூறியுள்ளார். பல்வேறு ஹிட் படங்களை பிரமாண்டமாக கொடுத்த ஷங்கர், இந்தியன் 2 திரைப்படத்தில் வழுக்கினார் என்றை கூற வேண்டும். எனவே, கேம் சேஞ்சர் திரைப்படம், ராம்சரணுக்கும், ஷங்கருக்கும் ஒரு திருப்புமுனையாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 74

    0

    0

    Leave a Reply