இதுவரைக்கும் ஜோதிகாவுடன் அது நடக்கவே இல்ல – நடிகர் சூர்யா ஏக்கம்!

Author:
7 November 2024, 9:54 pm

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக பார்க்கப்பட்டு வருபவர்கள் தான் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா.இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் ஆன பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்து நண்பர்களாக பழகத் தொடங்கி பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர் .

பல வருடங்கள் காதலித்து வந்த இவர்கள் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தேவ், தியா என இரண்டும் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே இப்போது நன்றாக வளர்ந்து விட்டார்கள் .

ஜோதிகா திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

jyothika-updatenews360

அதில் வெற்றியும் படைத்து வந்தார். இதனடைய ஹிந்தியில் திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்துவந்த ஜோதிகா மும்பையில் தனது கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் சென்று செட்டிலாக இருக்கிறார்.

சூர்யா கங்குவா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. அதன் பிரமோஷன்களில் சூர்யா படு தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேட்டி பேசிய நடிகர் சூர்யா நானும் ஜோதிகாவும் இணைந்து மீண்டும் நடிக்க வேண்டும் என்பது எந்த நீண்ட நாள் ஆசையாக இருக்கிறது.

surya jyothika

ஆனால் இதனால் வரை அது கனவாகவே இருக்கிறது. எங்களை இருவரையும் வைத்து படம் இயக்குங்கள் என்று எந்த இயக்குனரையும் நாங்களாக போய் கேட்கவே இல்லை. அது தானாக அமைந்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். என சூர்யா அந்த பேட்டியில் கூறியிருந்தார். இதை அடுத்து ரசிகர்கள் பலரும் சூர்யா ஜோதிகா இருவரையும் மீண்டும் திரையில் காண நாங்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் என கூறி வருகிறார்கள்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 130

    0

    0