தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சில வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கை துவங்கிய நடிகர் கார்த்தி முதல் படமே மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்ததை அடுத்து அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது .
இதை அடுத்து தொடர்ந்து சில வெற்றி திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து ஜப்பான் திரைப்படத்தில் நடித்து படுதோல்வியை சந்தித்தார் கார்த்தி. அதை அடுத்து தற்போது 96 திரைப்பட இயக்குனர் ஆன பிரேம் இயக்கத்தில் மெய்யழகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி .
இந்த திரைப்படத்தில் அவருடன் நடிகர் அரவிந்த்சாமி, தேவதர்ஷினி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் பாடல்கள் எல்லாம் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில் உச்சகட்ட எதிர்பார்ப்பில் மெய்யழகன் திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் .
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சூர்யா இது குறித்து பேசியபோது மெய்யழகன் திரைப்படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. படத்தை பார்த்து விட்டு அழுகை சந்தோஷம் எல்லாமே வந்து சேர்ந்தது. பருத்திவீரன் திரைப்படத்திற்கு பிறகு நான் கார்த்தியை கட்டி அணைத்துக் கொண்டேன். பிரேம் இயக்கிய 96 படத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அந்த படம் போல் இந்த படம் ஒரே இரவில் நடக்கும் கதைதான்.
இதையும் படியுங்கள்: எல்லாத்துக்கும் காரணம் குஷ்பு தான்…. திசை திரும்பும் ஜெயம் ரவியின் விவாகரத்து சர்ச்சை!
கார்த்தியின் இந்த கதை தேர்வு குறித்து ஜோதிகா என்னிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். சிறப்பாக இருக்கிறது என அதே போல் ஒரு படத்தை படமாக மட்டும் பாருங்கள் அது எவ்வளவு கலெக்ஷன் செய்தது என்ற பிரச்சனை எல்லாம் ரசிகர்களாகிய உங்களுக்கு வேண்டாம்.
விநியோகிஸ்தர்களுக்கும் படத்திற்கு முதலீடு செய்த தயாரிப்பாளர்களுக்கும் தான் அதைப் பற்றிய கவலை. எனவே படத்தை பார்த்துவிட்டு என்ஜாய் பண்ணுங்கள் அது மட்டும் போதும் விமர்சனம் செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டாம். இந்த மாதிரியான படங்கள் அபூர்வம் என சூர்யா கூறினார்.
0
0