அவர் எனக்கு நல்லதே செய்யல… காதல் தோல்வி குறித்து மனம் விட்டு பேசிய தமன்னா!

Author:
11 September 2024, 12:37 pm

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக இருந்து வரும் நடிகை தமன்னா பாலிவுட் சினிமாவில் இளம் ஹீரோவான நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். அவ்வப்போது இவர்கள் இருவரும் டேட்டிங் அவுட்டிங் செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கசிந்ததை தொடர்ந்து தாங்கள் காதலிப்பதை இவர்கள் இருவருமே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.

tamannah

நடிகை தமன்னா தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பிஸியான நடிகையாக இருந்து வரும் நடிகை தமன்னா விஜய் வர்மாவை விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் இருக்கிறார். இப்படியான சூழலில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை தமன்னா தனது காதல் தோல்வியை பற்றி மிகுந்த மன வேதனையுடன் பேசியிருக்கிறார்.

முதலில் ரிலேஷன்ஷிப் பற்றி பேசிய நடிகை தமன்னா உங்களின் பார்ட்னரின் குணாதிசயங்கள் எந்தவிதத்திலும் மாற்ற நினைக்காதீர்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்பது அவர்களை கட்டுப்படுத்துவது போன்றது. பொய் சொல்வது என்பது இருக்கக் கூடாது.

tamannah Boyfriend

சிறிய அளவிலான பொய் கூட சொல்லக்கூடாது. நீங்கள் காதலிக்கும் பெண் சொல்வதை கேளுங்கள் அவர்களுக்கு ஏதாவது, பிரச்சனை என்றால் காது கொடுத்து கேளுங்கள். எல்லா நேரத்திலும் அவர்கள் உங்களிடம் தீர்வை தேடி வருவதில்லை.

அவர்கள் சொல்வதைக் கேட்கும் நபர் தேவை என்பதால் அதை புரிந்து கொண்டு பிரச்சனைகளை கேளுங்கள். எனக்கு கிப்ட் கொடுத்தால் கோபம் வரும் கிப்ட் கொடுத்து ஒருவரை ஒரு பொருளுக்குள் அடக்குவது போன்றது என்பதால் அது ரிலேஷன்ஷிப்பிற்கு விலை நிர்ணயம் செய்வது போல் இருக்கும்.

tammanah actress

ஒரு ரிலேஷன்ஷிப்பில் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் காதலை மிகவும் வெளிப்படுத்தவும் நினைக்கிறேன். என்னுடைய பார்ட்னர் கோபப்படும் எந்த விஷயத்தையும் சொல்ல மாட்டேன். அதேபோல் எனக்கு இரண்டு முறை காதல் தோல்வி ஏற்பட்டு இருக்கிறது .

சிறுவயதில் ஒரு காதல் தோல்வி ஏற்பட்டது. நான் அந்த நபருக்காக எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டுமா என்றும் வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் அனுபவிக்க வேண்டி இருக்கிறது என்று நினைத்து அவரிடம் இருந்து விலகினேன்.

பின்னர் இரண்டாவது பிரேக்கப் கொஞ்ச நாள் கழித்து நடந்தது. அந்த காதலில் அந்த நபர் என் வாழ்க்கையில் நல்ல விஷயங்களை கொடுக்கவில்லை. அதனால் அந்த காதலையும் நான் விட்டுவிட்டேன் என மிகவும் மனம் திறந்து பேசி இருக்கிறார் தமன்னா.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!