அமரன் திரைப்படம் பெரும் சவால்களுக்கு இடையே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இதுவரை சிக்கலைச் சந்தித்த தமிழ் படங்களின் தொகுப்பை பார்க்கலாம்.
சென்னை: ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் அமரன். இப்படம் இதுவரை உலக அளவில் 100 கோடியைத் தாண்டி வசூலை எட்டி வருகிறது. அதேநேரம், இதில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக தமிழகத்தில் பல அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பினையை தெரிவித்திருக்கின்ற.
இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாக சிக்கலைச் சந்திக்காவிட்டாலும், தற்போது மாபெரும் சிக்கலைச் சந்தித்து வருகிறது என்று கூறலாம். ஆனால், ரிலீஸ் ஆவதற்கு முன்பே தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து உள்ளன. அந்த வகையில், விக்ரம் நடிப்பில் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் வெளியான துருவ நட்சத்திரம் பொருளாதார சிக்கலால் தவித்தது.
தயாரிப்பாளரின் நிதிப் பிரச்னை காரணமாக இப்படம் ரிலீஸ் ஆவதில் தள்ளிப்போனது. இருப்பினும், பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் தோல்வியையேச் சந்தித்தது. அதேபோல், விஜய் நடிப்பில் வெளியான காவலன் திரைப்படம், முதல் முறையாக சிக்கலைச் சந்தித்தது. இதனுடன் சிறுத்தை மற்றும் ஆடுகளம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் களமிறங்கின.
ஆனால், காவலன் படத்திற்கு முன்னதாக விஜயின் பாக்ஸ் ஆபிஸ் மிகவும் மோசமாக இருந்ததாக விநியோகஸ்தர்கள் கருதி, அதனை திரையரங்குகளில் வெளியிட மறுத்தனர். இதனால் பெரும் சிக்கல்கள் நிலவி வந்தன. அதன் பிறகு படம் வெளியானது. இதேபோல், விஸ்வரூபம் திரைப்படமும் அமரன் திரைப்படத்தைப் போன்று பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தது. இஸ்லாமியர்களை மத ரீதியாக தவறாக சித்தரிப்பதாகவும், பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.
இருப்பினும், இப்படம் வெளியாகி கமல்ஹாசனின் தொழில்நுட்ப திரைப்படத்தில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது எனலாம். இந்த வரிசையில், கத்தி திரைப்படம் ஆளும் திமுக அரசு முதல் பாஜக அரசு வரை பல்வேறு எதிர்வினைகளை சந்தித்தது. அதிலும் குறிப்பாக, மெர்சல் திரைப்படம் பாஜகவுக்கு எதிரான வார்த்தைகளைக் கொண்டதாக எதிர்ப்புகளை கிளப்பியது.
இதையும் படிங்க: அஜித்தை கொண்டாடும் கோலிவுட்… ஏன் தெரியுமா?
இருப்பினும் இவை இரண்டுமே படம் ரிலீஸ் ஆனதற்கு பிறகு சவாலைச் சந்தித்தது என்று கூறலாம். மிக முக்கியமாக இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது, தமிழ் சினிமாவில் அரசியல் மற்றும் மத ரீதியாக குறிப்பிடுவது என்பது தற்போது பல்வேறு சட்ட சிக்கல்களையும் சந்தித்து வருவது எனலாம். முன்னதாக, சாதி ரீதியாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே வைத்து படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும், அதனை நடுநிலையோடு கொண்டாடிய மக்கள், தற்போது சாதி ரீதியான படங்களை அதற்கான எதிர்ப்பையும் பதிவிட்டு வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.