“போயஸ் கார்டன்” பேச்சு அவசியமே இல்ல…. சுச்சி லீக்ஸ் பற்றி தனுஷ் வாய் திறக்காததற்கு காரணம்!

Author:
27 July 2024, 2:24 pm

நட்சத்திர நடிகராக வளர்ந்து உச்சத்தை தொட்டதற்கு ஈடாக பெரும் சர்ச்சைகளில் சிக்கி அவ்வப்போது விமர்சிக்கப்பட்டு வருபவர் தான் நடிகர் தனுஷ். குறிப்பாக இவர் பெண்கள் விஷயத்தில் வீக் என பல பிரபலங்கள் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். மேலும், இவரால் பாதிக்கப்பட்ட பல நடிகைகள் அதை வெளிப்படையாகவும் பேசியிருக்கிறார்கள்.

அந்த வகையில், சமீபத்தில் தனுஷின் 50வது திரைப்படமான ராயன் படத்தின் ஆடியோ லாஞ்சில் தனுஷ் பேசிய பேச்சுக்கள் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வந்தது.

அப்போது தனுஷ் போயஸ் கார்டனில் வீடு வாங்கிய விவகாரம் குறித்து பேச ஆரம்பித்தார். அது இவ்வளவு பெரிய பேசுபொருளாக மாறும் என தெரிந்திருந்தால் நான் சின்ன ஒரு அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கி குடித்தனம் சென்றிருப்பேன் என தனுஷ் கூறி இருந்தார்.

ஆனால், போயஸ் கார்டன் விவகாரம் ஒன்றும் அவ்வளவு பெரிய சர்ச்சைக்குள்ளான செய்தியாக சமூக வலைதளங்களில் வெளியாகவில்லை. அதைவிட பல மடங்கு சர்ச்சையை கிளப்பிய விஷயம் சுச்சி லீக்ஸ் விவகாரம் தான். ஆம், பிரபல பாடகி சுசித்ரா சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் தனுஷ் குறித்து பல அடுக்கடுக்கான புகார்களை கூறி அதிர வைத்தார்.

அது மட்டுமில்லாமல் தனுஷ் தான் இந்த சுச்சி லீக்ஸ் விவகாரத்திற்கு முழு காரணம். தனுஷுக்கும் என்னுடைய கணவருக்கும் ஓரினச் சேர்க்கை உறவு இருந்ததாக கூறியும் அதிர வைத்திருந்தார்.

இந்த விஷயம் அவ்வளவு பெரிய பூதாகரமாக வெடித்து.தனுஷை குறித்து பலரும் முகம் சுளித்த நிலையில் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட தனுஷ் ராயன் படத்தின் ஆடியோ லான்சில் பேசவே இல்லை. இதற்கான காரணம் என்ன என்று பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதாவது, “என்னை பொறுத்தவரை போயஸ் கார்டன் குறித்து தனுஷ் பேச அவசியமே இல்லை. அப்படி என்றால் சுசித்ரா அவர் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

அதைப் பற்றி ஏன் பேசவில்லை எல்லாம் பப்ளிசிட்டிக்காக தனது படத்தை பில்டப் பண்ண வேண்டும் என்பதற்காக தனுஷ் செய்த ட்ரிக்ஸ் தான் விஷயம் என்று பிஸ்மி தெரிவித்திருக்கிறார். அவர் சொல்வதைப் பார்த்தால் இதுவும் ஒரு விதத்தில் உண்மைதான் என்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

  • AR Murugadoss about SIkandar movie remake of Thalapathy's Sarkar விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!