தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகர் ஆக பல்வேறு திரைப்படங்களில் நடித்திருப்பவர் தான் எம்எஸ் பாஸ்கர். இவர் திரைப்பட நடிகர் என்பதையும் தாண்டி பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகிறார் .
திரைப்படங்களில் நடித்ததையும் தாண்டி தொலைக்காட்சி தொடர்களான சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி உள்ளிட்ட சில செயல்களிலும் இவர் நடித்திருக்கிறார். சிவகாசி மற்றும் மொழி போன்ற திரைப்படங்களில் மிகச்சிறந்த நடிகராக இவர் பார்க்கப்பட்டார் .
இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் இவரது மகன்தான் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படத்தில் இளம் வயது ராம் கேரக்டரில் நடித்திருந்தது. இவரது மகள் ஐஸ்வர்யா திரைப்படங்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவர் ஆக இருந்து வருகிறார் .
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் சமீபத்திய பேட்டி ஒன்றில் எம் எஸ் பாஸ்கர் எனக்கு பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்தது. ஆனால் அதை நான் வேண்டாம் என தவிர்த்து விட்டேன் எனக்கூறி அதற்கான காரணத்தையும் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
அதாவது என்னோட வீட்டிலேயே 100 நாள் நான் இருக்க மாட்டேன். அப்புறம் எப்படி இன்னொரு வீட்ல போய் 100 நாள் இருப்பேன்? எனக்கு பொறுமை இல்லை. நான் போகவில்லை அவ்வளவுதான்.
அது நல்ல வாய்ப்பா இல்ல கெட்ட வாய்ப்பா? அப்படின்னு தீர்மானிப்பது நான்தான். என்னால என்னோட பொண்ணு பையன பாக்காம இருக்கவே முடியாது. என்னோட பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்காம இருக்க முடியாது. இவ்வளவு விஷயம் இருக்கிறது அங்கே போய் இருக்க முடியுமா அப்படிங்கறது நான் தான் தீர்மானிக்க வேண்டும் என எம் எஸ் பாஸ்கர் கூறியுள்ளார்.