சம்மந்தமே இல்லாத சூர்யாவுக்கு எதுக்கு THANKS CARD? “வேட்டையன்” இயக்குனர் நெகிழ்ச்சி!

Author:
14 October 2024, 6:14 pm

தமிழ் சினிமாவில் தற்போதைய சூப்பர் ஹிட் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர்தான் டிஜே ஞானவேல். இவர் தமிழ் திரைப்பட இயக்குனராகவும் எழுத்தாளராகவும் இருந்து வருகிறார். சென்னையில் லயோலா கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் சினிமாவில் வருவதற்கு முன்னர் பத்திரிகையாளராக பணிபுரிந்து இருக்கிறார் .

ரத்த சரித்திரம் என்ற திரைப்படத்தில். எழுத்தாளராக இவரது வாழ்க்கை ஆரம்பித்தது. 2010 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. அதை தொடர்ந்து பயணம்,தோனி, உன் சமையலறையில் உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு எழுத்தாளராக பணி புரிந்திருக்கிறார். இதை அடுத்து 2017 ஆம் ஆண்டு கூட்டத்தில் ஒருத்தன் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் .

T.J. Gnanavel

இந்த திரைப்படம் ஓரளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதை அடுத்து சூர்யாவை வைத்து ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார் இயக்குனர் ஞானவேல். இந்த திரைப்படம் அவருக்கு பெரிய அடையாளமாகவும் மிகப்பெரிய வெற்றியையும் தேடி தந்தது.

அதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி வைத்து சமீபத்தில் வெளிவந்த வேட்டையன் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டிருக்கிறார். ஞானவேல் சமீபத்திய பேட்டி ஒன்றில் வேட்டையின் திரைப்படத்தில் சூர்யாவுக்கு தேங்க்ஸ் கார்ட் கொடுத்தது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.

vettaiyan

ஜெய் பீம் படத்தில் சூர்யா சார் நடித்ததால் தான் இன்னைக்கு உலகம் முழுக்க ஒரு கணிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு வாய்ப்பு எனக்கு உருவானது. அந்த படத்திற்கு பிறகு சூர்யா சாருக்கு ஒரு படம் பண்றதுக்காக நான் ரெடி ஆகிட்டு இருந்தேன். அந்த டைம்ல எனக்கு வேட்டையன் வாய்ப்பு வரும்போது இது உங்களுக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய நல்ல வாய்ப்பு மீண்டும் கூட நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து படம் பண்ண முடியும்.

surya

இதையும் படியுங்கள்:பாவிங்க… 55 நாள் நைட்டு பகலா என்ன வச்சு செஞ்சாங்க…. நடிகை பிரியா பவானி ஷங்கர் வேதனை!

ஆனால், இந்த சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க. சூப்பர் ஸ்டாரை வச்சு படம் இயக்கி வெற்றி கண்டுட்டு வாங்க என வாழ்த்தி அனுப்பினார். அதை என்னால் மறக்க முடியாது. சூர்யா சாராள் நான் இன்று உச்சத்தில் வளர்ந்திருக்கிறேன் என எனக்கு ஞானவேல் மிகுந்த நிகழ்ச்சியோடு பேசினார்.

  • veera dheera sooran director told that smoking and drinking scenes are not in his films மயிருங்குறது கெட்ட வார்த்தையா? என் படத்துல அந்த விஷயமே இல்லை- விக்ரம் பட இயக்குனர் பரபரப்பு பேட்டி…