அடடே பிரம்மாதம்… கெஸ் பண்ணது வீணா போகல – “மட்ட” பாடலில் மரணகுத்து போட்ட திரிஷா!

Author:
5 September 2024, 12:28 pm

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (கோட்) திரைப்படம் இன்று செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் தியேட்டரில் சென்று பார்த்து திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.

Goat

பெரும்பாலும் விஜய்யின் திரைப்படங்களில் குத்து பாடல்களுக்கு பிரபலமான நடிகைகள் வந்து அவருடன் குத்தாட்டம் போடுவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆம்,முன்னதாக “உன் தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா” என்ற பாடலுக்கு நடிகை ரோஜா குத்தாட்டம் போட்டு இருப்பார்.

அதேபோல் ஷாஜகான் படத்தில் வரும் “சரக்கு வச்சிருக்கேன்” பாடலில் நடிகை மீனா குத்தாட்டம் போட்டு இருப்பார். தொடர்ந்து “ஆல் தோட்ட பூபதி” பாடலில் நடிகை சிம்ரன் விஜய்க்கு ஈடு கொடுத்து பயங்கரமாக ஆடி இருப்பார். அதேபோல் திருமலை திரைப்படத்தில் “ஜக்கம்மாவாக” நடிகை கிரண் அதிரடி ஆட்டம் ஆடியிருப்பர்.

goat

மேலும் சிவகாசி திரைப்படத்தில் நடிகை நயன்தாரா “கோடம்பாக்கம் ஏரியா” பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டு இருப்பார். இப்படியாக தொடர்ந்து விஜய் திரைப்படங்களில் குத்து பாடல்களில் கட்டாயம் ஒரு பிரபலமான ஹீரோயின் நடனமாடி விடுவார்கள்.

அந்த வகையில் தற்போது கோட் திரைப்படத்தில் நடிகை திரிஷா விஜய்யுடன் சேர்ந்து மரண குத்து டான்ஸ் ஆடிய வீடியோ புகைப்படத்தை இணையத்தில் விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். முன்னதாக கோட் திரைப்படத்தில் நிச்சயம் திரிஷா ஒரு காட்சியில் வந்து போவார் என ரசிகர்கள் யூகித்து வந்த நிலையில் தற்போது அந்த எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

goat matta song

ஆம், விஜய்யின் கோட் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள மட்ட பாடலுக்கு நடிகை திரிஷா விஜய் உடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டு இருக்கிறார். இதனை இயக்குனர் வெங்கட் பிரபு மறைச்சு மறைச்சு வச்சு தற்போது சர்ப்ரைஸ் ஆக ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து இருக்கிறார்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?