“வினைகள் அகலட்டும், தடைகள் உடையட்டும்” விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறி வாலிப பசங்களை இழுக்கும் வாணி போஜன்!

Author:
7 September 2024, 2:13 pm

சீரியல் நடிகையாக இருந்து திரைப்பட நடிகையாக நட்சத்திர அந்த பிடித்திருப்பவர் தான் நடிகை வாணி போஜன். சீரியலில் வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கி பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்த வாணி போஜன் அதன் மூலம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆகா தொடரில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது .

vani bojan

தொடர்ந்து ஒரு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அவர் தெய்வமகள் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அந்த சீரியலில் அவருக்கு பெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால் திரைப்பட வாய்ப்பு அடுத்தடுத்து அவருக்கு தேடி வர ஆரம்பித்தது.

vani bojan

ஒரு இரவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை வாணி போஜன் ஓ மை கடவுளை திரைப்படத்தில் மீரா என்ற கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த வாலிப வட்டத்தையும் கவர்ந்திழுத்தார். அந்த திரைப்படம் இவருக்கு மாபெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

vani bojan

தொடர்ந்து சில பல திரைப்படங்களில் நடித்திருக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அந்த வகையில் தற்போது விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பிங்க் மற்றும் வெள்ளை நிறத்தில் ஸ்லீவ்லெஸ் சேலை அணிந்து கொண்டு அழகாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு “வினைகள் அகலட்டும், தடைகள் உடையட்டும், வெற்றிகள் குவியட்டும், மகிழ்ச்சி பொங்கட்டும்… அன்புடனுன் நட்புடனும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்” என கூறி பதிவிட்டுள்ளார்.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 282

    0

    0