டேய் நான்தான் சொன்னேன்ல.. கடுப்பான வெற்றிமாறன்.. என்ன நடந்தது?

Author: Hariharasudhan
27 November 2024, 9:54 am

விடுதலை பாகம் 2 இசை வெளியீட்டு விழாவில் கோபமான வெற்றிமாறன், மைக்கை வைத்துவிட்டுச் சென்ற காட்சிகள் வைரலாகி வருகிறது.

சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ளது விடுதலை பாகம் 2. இந்த நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூரி, இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது மேடையில் வெற்றிமாறன் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், மேடையின் பக்கவாட்டில் இருந்த சிலர் ஏதோ ஒன்றை வெற்றிமாறனிடம் கூறினர். அதற்கு அவர், “நான்தான் யார் பெயரையும் சொல்லவில்லை எனச் சொல்கிறேனே. டீம் என்றால் எல்லோரையும் சேர்த்துதானே” எனக் கூறினார்.

பின்னர் மைக்கை கோபமாக வைத்துவிட்டு, இளையராஜா அருகில் இருந்த தனது இருக்கையில் சென்று அமர்ந்துவிட்டார். இந்த நிலையில், விடுதலை பட இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் மைக்கை வைத்துவிட்டுச் சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் கருத்துகளுக்கு உள்ளாகி வருகிறது.

முன்னதாக, படம் குறித்து பேசிய வெற்றிமாறன், “ஒரு படம் எடுப்பதற்கு நிறைய உழைப்பு தேவை. சினிமா என்பது, ஒரு சிலருடைய பார்வை மேல் மற்ற எல்லோரும் கண்மூடித்தனமாக வைக்கும் நம்பிக்கை. அந்த உழைப்பும், அந்த நம்பிக்கையும் தான் அந்தப் படத்தை முழுமைப்படுத்தும்.

Viduthalai part 2 crew

விடுதலை என்னும் கதைக்கு வேலை செய்ய ஆரம்பித்தது டிசம்பர் 2020. இதற்காக 4 வருடங்கள் வேலை இருந்துள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும்போது திருமணம் செய்தவர்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கும் அனுப்பிவிட்டனர். அத்தனை வருடங்கள் வேலை பார்த்துள்ளோம்.

இதையும் படிங்க: சூர்யாவுடன் பைக்கில் சுற்றும் பிரபல நடிகை.. தீயாய் பரவும் VIDEO!

இப்படியான இத்தனை காலமும் ஒரு கதை, ஒரு சித்தாந்தம், அதை புரிந்துகொள்ள முயற்சிக்கும் சிலர், அந்த சிலர் மேல் உள்ள கண்மூடித்தனமான நம்பிக்கையில் பயணித்த 450 பேர். ஆனால், கடந்த முறை பெயர் எழுதி அனைவரது பெயரையும் நான் படித்தேன். அப்போது நேரம் இருந்தது, இப்போது அதற்கான நேரம் இல்லை.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் இருக்கின்றன. படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. உதவி இயக்குனர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், கலை இயக்குனர்கள், புரொடக்சன் என அத்தனை பேரும் அர்ப்ப்பணிப்புடன் இருந்தனர்” எனக் கூறினார். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 185

    0

    0