உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!

Author: Hariharasudhan
19 January 2025, 1:20 pm

உன்னை நீயே நம்பு போதும் உள்ளிட்ட அனல் பறக்கும் வரிகளுடன் விடாமுயற்சி படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித்குமார், நடிகை த்ரிஷா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

இந்த நிலையில், தற்போது படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலான ‘பத்திக்குச்சு’ ரிலீஸ் ஆகி உள்ளது. அதிலும் இதில் இடம் பெற்றுள்ள வரிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார். மேலும், அவருடன் இணைந்து யோகி சேவும் இப்பாடலை பாடியுள்ளார்.

மேலும், கைதி, விக்ரம், மாஸ்டர் ஆகிய படங்களில் பணியாற்றிய விஷ்ணு எடாவன் இந்த பத்திக்குச்சு பாடலை எழுதியுள்ளார். அதேநேரம், இப்பாடல் ராப் பாடல் இசையுடன் வெளியாகியுள்ளது. முன்னதாக, விடாமுயற்சி படத்தில் சவதீகா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரபேற்பை பெற்றது.

Vidaamuyarchi Second single pathikichu lyrics released

இதனிடையே, அனிருத் இசையில், அந்தோணி தாசன் பாடிய அந்தப் பாடல், மிகவும் துள்ளலாகவும், அஜித் குமாரின் கிளாஸிக் நடன அசைவுகளாலும் அதிகம் பேரால் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி, படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மாபெரும் ஊக்கமாகவும் அந்தப் பாடல் அமைந்தது.

இதையும் படிங்க: 3ஆம் ஆண்டு தூ(ங்கும்)வக்க விழா.. பரபரப்புக்கு உள்ளான பேனர்.. போலீஸ் கூறுவது என்ன?

முன்னதாக, பொங்கல் வெளியீடாக வெளியாக இருந்த விடாமுயற்சி, சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு, தற்போது பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!