அஜித் ரசிகர்களே அலார்ட்டா இருங்க… “விடாமுயற்சி” ரிலீஸ் தேதி லாக் பண்ணியாச்சு… எப்போ தெரியுமா?

Author:
7 September 2024, 6:06 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வரும் நடிகர் அஜித் தற்போது 53 வயதாகியும் தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தில் இருந்து வருகிறார். அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ajith-updatenews360

இதில் விடாமுயற்சி திரைப்படம் மும்முரமாக படப்பிடிப்புகள் நடைபெற்று ரிலீசுக்கு ஆக தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை பிரமாண்ட நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடிகை திரிஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார் .

மேலும், இவர்களுடன் அர்ஜுன் ,ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு அடைந்திருக்கும் நிலையில் ஒரே ஒரு பாடல் மட்டும் இன்னும் எடுக்க வேண்டி பாக்கியுள்ளதாம்.

vidamuyarchi

இதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு படக்குழு கிளம்பி போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஒரு சூப்பரான தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது அஜித் ரசிகர்களை கொண்டாட வைக்கும் வகையில் இந்த அப்டேட் கிடைத்திருக்கிறது.

விடாமுயற்சி வருகிற தீபாவளி தினத்தில் வெளி வருகிறது. இது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்று கேட்பீர்களானால் விடாமுயற்சி படத்தை கண்டிப்பாக வருகிற தீபாவளிக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட குழு திட்டமிட்டு விட்டார்களாம். அதற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

vidamuyarchi update

கோடிக்கணக்கான ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக இருந்து வரும் ஸ்டார் ஹீரோவான அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால் சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர் ,கவினின் Bloody beggar ஆகிய படங்களின் ரிலீஸ் செய்து தள்ளிப் போகும் என கூறப்படுகிறது.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 454

    0

    0