அப்போய்ய்ய்… பாத்ரூமில் விக்னேஷ் சிவன்…. கதவு தட்டி கூப்பிடும் செல்ல மகன்கள் – வைரல் வீடியோ!

Author:
14 September 2024, 6:08 pm

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கும் போது நயன்தாரா மீது காதல் வயப்பட்டு 8 ஆண்டுகள் அவரை காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணம் குழந்தைக்கு பிறகும் நயன்தாரா தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே தனது செல்ல மகன்களுடன் ஜாலி ட்ரிப் செல்லும் புகைப்படங்கள் வீடியோக்கள் வீட்டில் எடுத்துக்கொண்ட க்யூட்டான போட்டோக்கள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: விஜய்யின் கடைசி படம்… தீப்பந்தத்தை கையில் ஏற்றி அரசியல் என்ட்ரி – தளபதி 69 போஸ்டர் ரிலீஸ்!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி அன்மையில் கூட குடும்பமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய பூஜை புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்கள். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலை என்னவென்றால் விக்னேஷ் சிவன் பாத்ரூமில் கதவை தாழிட்டுக்கொண்டு குளித்துக் கொண்டிருக்கும் போது அவரது இரட்டைச் செல்ல மகன்கள் வந்து பாத்ரூம் கதவைத் தட்டி அப்போய்ய்ய்…அப்பா…. டாடா என கூப்பிடும் இந்த க்யூட்டான வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் எடுத்து வருகிறது.

  • Kalaipuli S. Thanu updates on Vaadivaasal வாடி வாசலை திறந்து விட்ட எஸ்.தாணு…சீறிப்பாயுமா வெற்றிமாறன்-சூர்யா கூட்டணி…!