அம்மா அப்பாவை இப்படித்தான் கூப்பிடுவாங்க… விஜய் சேதுபதி மகன் சொன்ன சீக்ரெட்!

Author:
5 November 2024, 11:56 am

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராகவும் நட்சத்திர அந்தஸ்திலிருந்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் திரை பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது முயற்சியாலும் தனது விடாமுயற்சியால் இன்று முன்னணி நட்சத்திர ஹீரோ இந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

vijay sethupathy son

ராஜபாளையத்தை சொந்த ஊராகக் கொண்ட விஜய் சேதுபதி சினிமா மீது இருந்த ஆர்வத்தால் வெளிநாட்டில் செய்து கொண்டிருந்த வேலையை கூட விட்டுவிட்டு சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து கூத்துப்பட்டறையில் நடிப்பு கலையை கற்றுக்கொண்டு சினிமா துறையில் அறிமுகமானார்.

ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி பின்னர் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

vijay-sethupathy son

அதன் பிறகு சீன ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்து தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். அந்த திரைப்படம் அவருக்கு சிறந்த படமாக வாழ்நாளில் பேசக்கூடிய படமாக அமைந்தது.

தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம், சூது கவ்வும், தர்மதுரை உள்ளிட்ட தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் என்று அதஸ்தத்தை பிடித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

vijay sethupathy

ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தபோது வில்லன் கதாபாத்திரத்தை தைரியமாக ஏற்று நடித்து அதில் வெற்றியும் கண்டவர் விஜய் சேதுபதி. இவ்வளவு துணிச்சலான முடிவை எடுப்பதற்கு எல்லா நடிகர்களுக்கும் தைரியம் வந்து விடாது. அதுதான் இவரது வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.

இதனிடையே விஜய் சேதுபதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். முன்னதாக இந்த பணியை நடிகர் கமல்ஹாசன் செய்து வந்தார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அப்பா அம்மாவின் அழகான காதலை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் .

அதாவது என் குடும்பத்தை சிறப்பாக வழிநடத்துவது என்னுடைய அம்மா மற்றும் தங்கை தான் அவர்கள் இருவரும் தான் என் குடும்பத்தின் உற்சாகத்திற்கு மிக முக்கியமான காரணம் என்றும் என்னுடைய அப்பாவை என்னோட அம்மா “அத்தான்” என்று தான் அழைப்பார். அவர்கள் இருவரும் ரொம்ப அழகான ஜோடி என்று குடும்ப ரகசியத்தையும் அப்பா அம்மாவின் அழகான காதலையும் சூர்யா அந்த பேட்டியில் கூறி இருந்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 166

    0

    0