பிரமாண்டத்தை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி.. சீன பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் VJS!

Author: Hariharasudhan
21 December 2024, 5:58 pm

விஜய்சேதுபதியின் மகாராஜா திரைப்படம், பாகுபலி 2 வசூல் சாதனையை சீனாவில் முந்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. சிறுமிகள் மீதான பாலியல் வல்லுணர்வை, தந்தை – மகள் பாசத்தில் கச்சிதமான காட்சி அமைப்பால் உருவான இப்படம், ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, திரையரங்குகளில் மட்டுமன்றி ஓடிடி தளத்திலும் பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக முதல் இடத்தில் இருந்தது. இதனால் மகாராஜா திரைப்படம் வெளியான நெட்ஃபிளிக்ஸ் தளமும் மகாராஜா இயக்குநரைக் கெளரவித்தது. இப்படிப்பட்ட மாபெரும் வரவேற்பால் சீனாவிலும் சமீபத்தில் மகாராஜா திரைப்படம் வெளியானது.

இதனையடுத்து, சீன ரசிகர்கள் மத்தியிலும் ‘மகாராஜா’ படத்துக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி, படம் வெளியான வெகு விரைவிலே சீனாவில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலை மகாராஜா படம் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maharaja movie box office in China ahead of crossed Baahubali 2

அதுமட்டுமல்லாமல், ‘பாகுபலி 2’ படத்தின் வசூலையும் மகாராஜா முறியடித்திருக்கிறது. இதனால், தற்போதையைச் சூழலில் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையை மகாராஜா திரைப்படம் படைத்திருக்கிறது. அதிலும், அதிக வசூல் செய்த இந்தியப் படங்களில் 10வது இடத்தில் மகாராஜா படம் உள்ளது.

இதையும் படிங்க: புஷ்பா 2 படக்குழுவுக்கு இடியாய் இறங்கிய செய்தி… வசூலை பதம் பார்த்த HD!

மேலும், சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக 193 கோடி ரூபாய் வசூலை மகராஜா எட்டியுள்ளது. இந்தப் படத்தில் மம்தா மோகன்தாஸ், அனுராக் கஷ்யாப், நட்டி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை 2 படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

  • Cool Suresh calls for Bigg Boss ban பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க..கொந்தளித்த கூல் சுரேஷ்..!
  • Views: - 92

    0

    0

    Leave a Reply