எங்க தலைவன் என்ன சொம்பையா…? விஜய் டிவியை விளாசும் விஜய் சேதுபதி ஃபேன்ஸ்!

Author:
9 September 2024, 2:22 pm

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி மிகப்பெரிய அளவில் பேமஸான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 7 சீசன்கள் முடிவடைந்து விட்டது.

7 சீசன்களில் கலந்துக்கொண்ட பல பிரபலங்கள் தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு தற்போது திரைப்படத்துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனையோ திறமைசாலிகளை முகம் அறிய செய்து பிரபலம் ஆக்கிய பெருமை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சேரும். இந்த நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து கடைசி வரை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார்.

ஆனால் சமீபத்தில் இனிமேல் நான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதிலிருந்து விலகினார் .

vijay sethupathy

இது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அடுத்தது யார் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவார்? என்ற கேள்வி மக்களிடையே சுவாரஸ்யத்தை எழுப்பியது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று விஜய் டிவியில் இருந்து ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது.

அதாவது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போவதாக அறிவித்திருந்தார்கள். இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் ஆரவாரமும் கிடைத்துள்ளது. பிக்பாஸ் 8 சீசன் அடுத்த மாதம், அக்டோபர் 13ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

bigg boss

இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதற்காக ரூ. 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது மிகவும் குறைவான தொகை என ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கு முன் தொகுத்து வழங்கி வந்த கமல் ஹாசன் ரூ. 120 கோடி வரை சம்பளம் வாங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள்… என் தலைவன் என்ன சொம்பையா? என கேள்வி எழுப்பி விஜய் டிவியை விளாசித்தள்ளியுள்ளனர்.

  • Keerthy Suresh viral photos in baby john movie கழுத்தில் தாலி உடையில் கவர்ச்சி…சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்…வைரலாகும் புகைப்படம்…!
  • Views: - 266

    0

    0