நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (கோட்) திரைப்படம் இன்று செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தில் ஹீரோயின்களாக ஸ்னேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளனர்.
இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா , யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
தளபதி விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்)’ திரைப்படம் கேரளா, ஆந்திரா, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் அதிகாலை 4 மணிக்கே ரசிகர்கள் கோட் படத்தை பார்த்து கொண்டாடினர். இப்படத்திற்கு தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ் ரசிகர்கள் தியேட்டரில் படத்தை பார்த்து கொண்டாடி வரும்நிலையில் ஆந்திரா, கேரளா மாநிலங்களில் கோட் படத்தின் 4 மணி சிறப்பு காட்சியை பார்த்து விட்டு படத்தின் விமர்சனத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் GOAT படத்தை தளபதி விஜய் தனது குடும்பத்துடன் சேர்ந்து GOAT படத்தை பார்த்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆம், நேற்று இரவு அடையாறில் உள்ள பிரபல திரையரங்கில் படம் பார்த்ததாக தகவல் கூறுகிறது.