DD மாதிரி ஒரு Anchor பார்க்கவே முடியாது.. பிரியங்காலா ஒண்ணுமே இல்ல – போட்டுடைத்த பிரபலம்!

Author:
22 September 2024, 4:10 pm

கடந்த சில நாட்களாக விஜே மணிமேகலை மற்றும் பிரியங்காவின் சண்டை விவகாரம் தான் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 5வது சீசனில் விஜே மணிமேகலை தொகுப்பாளினியாக தனது சிறப்பான பணியை செய்து வந்தார்.

priyanka - Cook With Comali

ஆனால், விஜே பிரியங்கா மணிமேகலையை வேலை செய்ய விடாமல் அங்கு பாலிடிக்ஸ் செய்து தன்னுடைய அதிகாரத்தையும் ஆணவத்தையும். வெளிப்படுத்தி காட்டி மணிமேகலை தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத அளவுக்கு டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார் .

இதனால் அதிரடியாக விஜே மணிமேகலை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து வெளியேறி விட்டார். இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து பிரியங்காவின் முகத்திரையை பலரும் கிழித்து வருகிறார்கள். மேலும் சில பேர் பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரியங்கா மணிமேகலை விவகாரம் குறித்து பேசி இருக்கும் பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளரான ரஞ்சித் டிடி மாதிரி ஒரு ஆங்கரை இதுவரை நம்மால் பார்க்கவே முடியாது இனிமேலும் பார்க்க முடியாது.

vj Priyanka - CWC season 5

அவங்க ரொம்ப ப்ரொபஷனல் ஆனவங்க அடுத்தவங்க மன நோக தன்னோட நேர்காணலில் பேசவே மாட்டாங்க. டபுள் மீனிங் பேச மாட்டாங்க. டிடி வரிசையில் தொகுப்பாளினி பாவனாவும் மிகவும் ப்ரொபெஷனல் ஆன ஆங்கராக இருந்து வந்தார்.

இதையும் படியுங்கள்: அண்ணன் திருமணத்தில் அழகு தேவதையாய் சமந்தா – வைரலாகும் குடும்ப புகைப்படம்!

இதில் இடையே நுழைந்த பிரியங்கா தன் இஷ்டத்துக்கும் தன்னுடைய ஸ்டைலில் ரவுடித்தனமாகவும் எப்போதும் சிரித்துக் கொண்டேவும் அடுத்தவர்கள் மனம் நோகும் படியாகும் டபுள் மீனிங் அர்த்தத்திலும் ஆங்கரிங் செய்து வந்தார்.

அவர் செய்தது முறையான அங்கரிங் இல்லை. டிடி கால் தூசுக்கு கூட பிரியங்காவெல்லாம் வரமாட்டார் என சமீபத்தில் பேசி இருக்கிறார். ரஞ்சித்தின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி பலரும் அவரது கருத்து நியாயமானது டிடியை போன்ற ஒரு ஆங்கரை பார்க்க முடியாது என கூறிய வருகிறார்கள்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 313

    0

    0