விடாமுயற்சி ட்ராப்? படம் தள்ளிப்போனதற்கு இதுதான் காரணம்!
Author: Hariharasudhan1 January 2025, 9:58 am
அஜித்குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருந்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு. தள்ளிப் போவதாக வெளியான அறிவிப்பால், அஜித் ரசிகர்கள் மிகுந்த கோபத்துடன் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: நேற்றைய தினம், லைகா புரொடக்ஷன் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை அஜித்குமார் ரசிகர்களுக்கு அளித்தது. இது தொடர்பாக லைகா புரொடக்ஷன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்பட்டுள்ளது. மேலும், இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” எனத் தெரிவித்து இருந்தது.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் விடாமுயற்சி. முதலில், அஜித்தின் ஆக்ரோஷமான போஸ்டர் உடன் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கையில் பேக் ஒன்றுடன் பாலைவன நடுவே உள்ள சாலையில் அஜித்குமார் நடப்பது போன்ற போஸ்டர் அடுத்ததாக வெளியானது. ஆனால், அதற்கு பிறகு வெகு நாட்கள் எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் இருந்து வந்தது.
ஒருவேளை, இதுவும் வலிமை போல் வலியை ஏற்படுத்தி விடுமோ என ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தனர். ஆனால், தீபாவளிக்கு பிறகு அப்டேட்ஸ் சரவெடியை கொளுத்தியது விடாமுயற்சி படக்குழு. தொடர்ந்து, பொங்கல் வெளியீடு என்ற அறிவிப்புடன், த்ரிஷா உடனான புகைப்படங்களும் வெளியாகி அசத்தின. மேலும், அஜித்குமார் இளமை லுக்கில் இருந்த புகைப்படங்களும் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வந்தது.
எனவே, எப்போது புக்கின் ஓப்பன் ஆகும், விடாமுயற்சி பொங்கலை எப்போது கொண்டாடலாம் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் தான் புத்தாண்டு பரிசாக படம் தல்லிப்போவதை படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதற்குப் பின்னால், தொழில் நுட்பக் காரணங்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால், இதனை ஏற்க ரசிகர்களுக்கு மனம் இல்லை என்பதை அவர்களது கருத்துகளில் காண முடிகிறது.
இதையும் படிங்க: “SAWADEEKA”பாடலுக்கு அஜித் செய்த தியாகம்…கல்யாண் மாஸ்டர் சொன்ன தகவலை கேட்டு ரசிகர்கள் ஷாக்..!
குறிப்பாக, விடாமுயற்சி படத் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், தொழில் நுட்பக் காரணங்களே முதன்மையானது எனவும் சிலர் கூறி வருகின்றனர். அதில் ஒரு பயனர், “Dear ‘AK’yens! ஒரு திரைப்பட உருவாக்கத்தில் கடைசி நேர அவஸ்தைகள் கை மீறி நிற்பவை. இன்றைய தொழில்நுட்பம் எடுத்துக் கொள்ளும் கால அளவு நம் வசத்தில் இருப்பதில்லை. கார் கவிழ்ந்த ஆபத்திலும் AK நடிப்பது உங்களுக்காகவே. தாமதம் விடாமுயற்சியை வீழ்த்தாது. லைகாவை லைக் செய்யுங்கள் like AK” எனக் குறிப்பிட்டுள்ளார்.