மாலை நேரத்தில் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றும் போது இந்த ரெசிபி டிரை பண்ணி பாருங்க!!!
Author: Hemalatha Ramkumar13 May 2023, 7:39 pm
கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் மாலை நேர விளையாட்டை முடித்துவிட்டு ஆய்ந்து ஓய்ந்து வீட்டிற்கு வரும் பொழுது ஏதாவது சத்தாகவும், அவர்களின் ஆற்றலை நிரப்பக்கூடிய ஒன்றை ஸ்நாக்ஸாக செய்து கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், இந்த உருளைக்கிழங்கு ரெசிபி உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்கள் குழந்தைகளை குஷிப்படுத்த உதவும் ஒரு உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெசிபி பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு-3 (பெரியது
மிளகுத்தூள்- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
*முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி அதனை முழு கிழங்காக தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து போட்டு வேக வைக்கவும்.
*உருளைக்கிழங்கு குழைவாக வெந்துவிடக் கூடாது.
*ஒரு கத்தி வைத்து குத்தி பார்க்கும் போது சுலபமாக உள்ளே செல்ல வேண்டும். ஆனால் உடைந்து விடக்கூடாது.
*இப்போது தண்ணீரை வடிகட்டி உருளைக்கிழங்கினை சிறிய பல் கொண்ட துருவல் பயன்படுத்தி துருவவும்.
*இதனோடு 1/2 தேக்கரண்டி மிளகு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
*இதனை உங்களுக்கு பிடித்த வடிவத்தில் உருட்டி கொள்ளவும்.
*இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கு பந்தை பொரித்து எடுக்கவும்.
*அவ்வளவு தான்… சுவையான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் தயார்.