சாதம் மீந்து போனாலும் இனி கவலையே இல்ல… பத்தே நிமிஷத்துல அது காலியாகுற மாதிரி கிரிஸ்பி போண்டா ரெசிபி இதோ!!!

Author: Hemalatha Ramkumar
12 October 2024, 7:45 pm

பொதுவாக வீட்டில் மதிய உணவுக்காக வடித்த சாதம் மீந்துவிட்டால் அதனை இரவில் சாப்பிடுவதற்கு நிச்சயமாக போட்டி நடப்பது எல்லார் வீட்டிலும் நடக்கும் வழக்கமான ஒன்றுதான். இறுதியாக மீதமான அந்த சாதத்தை அம்மாக்களே சாப்பிடும்படி ஆகிவிடும். ஆனால் இனியும் அப்படி நடக்காமல் இருக்க மீந்து போன சாதத்தை வைத்து பத்தே நிமிடங்களில் மொறு மொறுவென்று ஒரு ஸ்நாக்ஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

வடித்த சாதம் – 2 கப்

அரிசி மாவு – ½ கப்

உருளைக்கிழங்கு – 2

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

ஆப்ப சோடா – 2 சிட்டிகை

சில்லி ஃப்ளேக்ஸ்

கொத்தமல்லி

புதினா

கறிவேப்பிலை

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் 2 கப் வடித்த சாதம், 2 உருளைக்கிழங்கு, 1/2 கப் அரிசி மாவு, 2 டேபிள் ஸ்பூன் தயிர், ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, 1/4 கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒருவேளை உங்களுக்கு வடை மாவு பதத்திற்கு வரவில்லை என்றால் கூடுதலாக கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து சரி செய்து கொள்ளவும். 

அடுத்து அரைத்து வைத்த இந்த மாவில் 2 சிட்டிகை ஆப்ப சோடா, சிறிதளவு சில்லி ஃப்ளேக்ஸ், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

இதையும் வாசிக்கலாமே: ஆவி பறக்க இட்லி சுட்டு இந்த குருமா வச்சு சாப்பிட்டு பாருங்க… இட்லி உள்ள போறதே தெரியாது!!!

இப்போது கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நாம் கலந்து வைத்துள்ள மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து போண்டாவாக போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து சுட சுட டீயோடு பரிமாறி பாருங்கள்… எனக்கு வேண்டாம் உனக்கு வேண்டாம் என்று சொன்னவர்கள் எனக்கு , உனக்கு என்று அடம்பிடித்து சாப்பிடுவார்கள்.

  • Rashmika Mandanna Viral Video சினிமாவுக்காக 19 வயதில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க..வைரலாகும் வீடியோ..!
  • Views: - 583

    0

    0