எள்ளு சாதம்: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வாரம் ஒருமுறை இத செய்து கொடுங்க!!!
Author: Hemalatha Ramkumar7 June 2022, 4:43 pm
நல்லெண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படும் எள்ளு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் எள்ளு சாப்பிடுவது எலும்புகளை வலுவாக வைக்க பெரிதும் உதவுகிறது. அதோடு இரத்த ஓட்டத்தை சீராக்கி, வயிற்றை சுத்தம் செய்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இத்தகைய எள்ளு வைத்து ஒரு ருசியான வெரைட்டி ரைஸ் எப்படி செய்வது என பார்க்கலாம்
தேவையான பொருட்கள்:
பொடி அரைக்க:-
வெள்ளை எள்ளு – 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
வர மிளகாய் – 6
கொப்பரை தேங்காய் – ஒரு தேக்கரண்டி
சாதம் செய்ய:-
எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி, கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை – ஒரு கொத்து
வேர்க்கடலை – ஒரு தேக்கரண்டி
முந்திரிபருப்பு – 5 பெருங்காயத் தூள் –1/4 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி காய்ந்தமிளகாய் – 2
வேக வைத்த சாதம் – ஒரு கப்
செய்முறை:
*ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெள்ளை எள்ளு, கடலைப்பருப்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
*பின்னர் கொப்பரைத் தேங்காயையும் சேர்த்து வறுத்து ஆற வைத்து எடுத்து கொள்ளுங்கள்.
*இது ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
*அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
*அடுத்து கறிவேப்பிலை மற்றும் முந்திரி பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
*இதனோடு வடித்த சாதத்தை சேர்த்து கிளறவும்.
*பின்னர் நாம் தயார் செய்து வைத்த பொடியை சேர்த்து கூடவே இரண்டு கரண்டி நெய் ஊற்றி கிளறி இறக்கவும்.
*அவ்வளவு தான் சுவையான எள்ளு சாதம் தயார்.
0
0