இந்த மாதிரி சுவையான அக்கார அடிசல் இதுவரை சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க!!!
Author: Hemalatha Ramkumar20 October 2022, 6:16 pm
ஒரு சில உணவுகளை நாம் என்ன தான் வீட்டில் செய்தாலும் அவை கோவில்களில் தரப்படும் பிரசாதங்களைப் போல வராது. இது மாதிரி நாம் சாப்பிட ஏங்கும் பிரசாதங்களில் ஒன்று அக்கார அடிசல். இந்த பதிவில் அக்கார அடிசல் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 3 கப்
பயித்தம் பருப்பு – 3 தேக்கரண்டி
நெய் – 1/2 கப்
பால் – 8 கப்
முந்திரி திராட்சை -10 கிராம்
ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி
செய்முறை:
*முதலில் ஒரு கடாயில் பயித்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.
*பருப்பு பாதி வறுப்பட்டதும் பச்சரிசி சேர்த்து வறுக்கவும்.
*இரண்டும் வறுப்பட்ட பிறகு சுத்தம் செய்து குக்கரில் போட்டு 6 கப் பால் ஊற்றவும்.
*இது 4 விசில் வரும் வரை வேகட்டும்.
*வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி வைக்கவும்.
*கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு மற்றும் திராட்சையை வறுத்து தனியாக வையுங்கள்.
*அதே கடாயில் நெய்யுடன் மீதமுள்ள இரண்டு கப் பாலை சேர்க்கவும்.
*பால் கொதித்து வந்தவுடன் வேக வைத்த பருப்பு மற்றும் பச்சரிசியை சேர்த்து குறைந்த தீயில் வைத்து கிளறவும்.
*இடை இடையே தேவையான அளவு நெய் ஊற்றி கிளறவும்.
*இப்போது வடிகட்டி வைத்த வெல்லத்தை சேர்த்து கிளறவும்.
*கடைசியில் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து இறக்கினால் சுவையான அக்கார அடிசல் தயார்.
0
0