முருங்கை கீரையை பொரியலாக சமைத்து சாப்பிடவில்லை என்றாலும். முருங்கை கீரை போட்ட சாம்பாரை சப்பிட்டாலாவது, கீரையின் சத்து, நம் உடலில் கொஞ்சம் சேரும். முருங்கை கீரையின் உதவியால் சூப், ரசம், குழம்பு உள்ளிட்டவை செய்து பயன்படுத்த முடியும். அதேபோல்
காய்கறி பயன்படுத்தாமல், முருங்கை கீரை வைத்து டேஸ்டியான சாம்பார் செய்யலாம். எப்படி முருங்கை கீரை சாம்பார் செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை – 3 கைப்பிடி
துவரம்பருப்பு – 200 (கிராம்)
சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியத)
பூண்டு – 3 பல்
கடுகு, உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1/4 ஸ்பூன்
மிளகு – 10
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
வரமிளகாய் – 2
சாம்பார் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
புளி – நெல்லிக்காய் அளவு
வேகவைக்க:
துவரம்பருப்பு, பூண்டு, மஞ்சள்தூள் ஆகிய மூன்றையும் வேக வைத்து நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை:
*அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
*பின்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு , அவற்றுடன் சாம்பார் தூள் சேர்க்கவும். ஒரு நிமிடம் நன்கு கிளறிய பின்னர் முன்பு வேக வைத்து தனியாக எடுத்து வைத்துள்ள பருப்பு கலவையை
இவற்றுடன் சேர்க்கவும்.
*மேலும் இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
*பிறகு, நெல்லிக்காய் அளவு ஊற வைத்த புளிக்கரைசலை சேர்த்து 10 நிமிடம் நன்க கொதிக்க வைக்கவும்.
*பிறகு தண்ணீரில் நன்கு அலசி எடுக்கப்பட்ட முருங்கை கீரை இலைகளை சேர்த்து நன்கு கிளறி விடவும். 5 நிமிடம் கொதித்த பிறகு பாத்திரத்தை கீழே இறக்கி விடவும்.
*இப்போது , சுவையான முருங்கை கீரை சாம்பார் தயார். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து ருசித்து மகிழவும்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.