சரியாக சமைக்காததாலோ என்னவோ, ஒரு சில உணவுகளை நாம் ஒதுக்கி விடுகிறோம். அந்த வகையில் புடலங்காய், பாகற்காய், சேனைக்கிழங்கு போன்றவை அடங்கும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இவற்றை ஒதுக்குவது தவறான விஷயம். ஆகவே இந்த காய்கறிகளில் ஒன்றான சேனைக்கிழங்கை யாரும் வேண்டாம் என்று சொல்லாதவாறு எப்படி சுவையாக செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சேனை கிழங்கு – 500 கிராம்
சோள மாவு – ஒரு தேக்கரண்டி
கடலை மாவு – ஒரு தேக்கரண்டி
மிளகாய்தூள் – ஒரு தேக்கரண்டி
அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 200 மில்லி
உப்பு – 3/4 தேக்கரண்டி
செய்முறை:
*சேனைக்கிழங்கு வறுவல் செய்வதற்கு ஒரு குக்கரில் சுத்தம் செய்த 1/2 கிலோ சேனைக்கிழங்கினை சேர்த்து ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரவிட்டு வேக வைத்து எடுக்கவும்.
*வேக வைத்த சேனைக்கிழங்கை தோல் உரித்து நறுக்கி வையுங்கள்.
*ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
*இப்போது நறுக்கி வைத்த சேனைக்கிழங்கினை இந்த கலவையில் நன்கு பிரட்டி வைக்கவும்.
*ஒரு கடாயில் 200ml எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் சேனைக்கிழங்கு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சிவந்து வரவிட்டு எடுக்கவும்.
*அவ்வளவு தான்… க்ரிஸ்ப்பியான, சுவையான சேனைக்கிழங்கு வறுவல் தயார்.