காரசாரமான கடலைப்பருப்பு சட்னி… சுட சுட இட்லி, தோசை, சாதம் எதுவா இருந்தாலும் அட்டகாசமா இருக்கும்!!!

Author: Hemalatha Ramkumar
12 October 2022, 7:32 pm

கடலைப்பருப்பு பயன்படுத்தி காரசாரமான சட்னி ரெசிபி பற்றி தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இந்த சட்னியானது சூடான இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்றவற்றிற்கு சூப்பராக இருக்கும். அது மட்டும் இல்லாமல் சூடான சாதத்திற்கு கூட இதனை போட்டு சாப்பிடலாம்.

இதனை செய்வதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 8 வர மிளகாய் அளவிற்கு சேர்த்து வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். அதே எண்ணெயில் 4 தேக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் கொட்டி கொள்ளவும்.

இப்போது தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரண்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராக மாறும் வரை வதக்கி கொள்ளவும். பின்னர் இரண்டு தக்காளி சேர்த்து அதனையும் பச்சை வாசனை வராத அளவிற்கு வதக்கவும்.

இப்போது பொருட்கள் அனைத்தும் ஆறியதும் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். இதனை தாளிக்க எண்ணெயை காய விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டவும். அவ்வளவு தான்… காரசாரமான கடலைப்பருப்பு சட்னி தயார்.

  • Dhanush Vs Nayanthara 9 வருடங்களாக நயன்தாராவை பழிவாங்கும் தனுஷ்…. பிரச்சனையின் பின்னணி இது தான்!
  • Views: - 720

    0

    0