மாங்காய் சீசன் வந்தாச்சு… இனியும் ஏன் காத்திருக்கணும்… இந்த மாதிரி பச்சடி செய்து அசத்துங்க!!!
Author: Hemalatha Ramkumar13 May 2022, 1:22 pm
. மாங்காய் என்றாலே அனைவருக்கும் வாயில் எச்சில் ஊறும். அதுவும் புளிப்பும், இனிப்பும், காரமும் கலந்த செய்யப்படும் மாங்காய் பச்சடி மிகவும் சுவையாக இருக்கும். மாங்காய் பச்சடியை இரண்டு விதமாக செய்வார்கள் மாங்காயை துருவி அல்வா போன்றும், மற்றொன்று மாங்காயை துண்டு துண்டாக நறுக்கியும் செய்வர். வாங்க இனிப்பு, புளிப்பும், காரமும் கலந்த மாங்காய் பச்சடி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மாங்காய் – 1
வெல்லம் – தேவைக்கேற்ப
கடுகு – 1/2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் – 2
மிளகாய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மாங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
*வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதித்ததும் வெல்லத்தை சேர்த்து பாகு செய்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* அடுத்ததாக அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு , வரமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
* பிறகு இரண்டு நிமிடம் நன்றாக வதக்கி விட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடிப் போட்டு வேக விடவும்.
* பின்பு மாங்காய் அரைபதம் வெந்தவுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
*பிறகு மாங்காய் முக்கால் பாகம் வெந்தவுடன் பாகு செய்து வைத்துள்ள வெல்லதை சேர்க்கவும். வெல்லம் கரைந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
*வெல்லத்தை மாங்காயின் இனிப்பிற்கேற்ப கூடுதலாகவோ குறைச்சலாகவோ சேர்த்துக்கொள்ளவும்.
* இனிப்பு, புளிப்பு, காரம் நிறைந்த சுவையான மாங்காய் பச்சடி தயார்.
0
0