ஸ்ட்ராங்கா பெர்ஃபெக்டா ஒரு டீ போடுவோமா…???

Author: Hemalatha Ramkumar
24 September 2024, 6:58 pm

டீ என்பது வெறும் வார்த்தை அல்ல, அது ஒரு எமோஷன் என்று சொல்லும் அளவுக்கு பலர் டீ பைத்தியமாகவே இருப்பார்கள். தினமும் 5 முதல் 6 கிளாஸ் டீ கூட குடிக்கும் அளவுக்கு டீ மீது அவ்வளவு ஆசை கொண்டிருப்பார்கள். ஆனால் வீட்டில் போடும் டீயை விட கடைகளில் டீ வாங்கி குடிப்பது இன்னும் சுவையாக இருக்கும் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எனினும் சரியான விஷயங்களைப் பின்பற்றினால் வீட்டிலேயே ஸ்ட்ராங்கான, சுவையான டீயை தயார் செய்யலாம். ஒரு சிலருக்கு டிகாஷன் அதிகமாக இருக்க வேண்டும், ஒரு சிலருக்கு கம்மியாக இருக்க வேண்டும். ஆனால் இது எதுவும் இல்லாமல் அனைவரும் விரும்பி குடிக்கும் வகையில் மிதமான அளவு டிகாஷன் மற்றும் அருமையான சுவையில் டீயை எப்படி வீட்டில் தயார் செய்வது என்று பார்க்கலாம். 

டீ தயார் செய்வதற்கு முன்பு முதலில் ஒரு உரலில் 4 ஏலக்காய் மற்றும் 2 துண்டு இஞ்சி சேர்த்து நன்றாக நசுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் வழக்கமாக டீ போடும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 3/4 கிளாஸ் அளவு தண்ணீர் சேர்க்கவும். 2 கிளாஸ் அளவு டீ தயார் செய்வதற்கு அதே கிளாஸில் 3/4 கிளாஸ் அளவு தண்ணீர் சரியான அளவாக இருக்கும்.

மேலும் படிக்க: கிரீன் டீ குடிக்கும் போது இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க!!!

இந்த தண்ணீரில் நாம் எடுத்து வைத்துள்ள இஞ்சி மற்றும் ஏலக்காயை சேர்க்கவும். பின்னர் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இனிப்பு உங்களுடைய சுவைக்கு ஏற்றவாறு கூடவோ குறையவோ சேர்த்துக் கொள்ளலாம். அடுத்து தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் 1 1/2 டீஸ்பூன் அளவு டீ தூள் சேர்க்கவும். 

டீ தூள் சேர்த்தவுடன் இந்த தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க விடவும். தண்ணீர் குறைந்ததும் அதில் 2 டம்ளர் காய்த்து ஆறவைத்த பாலை டிகாஷனுடன் சேர்த்து ஊற்றிக் கொள்ளவும். டிகாஷன் தயாரிக்க தண்ணீர் எடுத்த அதே டம்ளரில் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். 

Tea Healthy Tips

பால் சேர்த்தவுடன் இது 2 நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்கட்டும். இறுதியாக டீயில் 2 கிராம்பு சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம். இப்போது டீயை வடிகட்டி விட்டு நுரை வரும் வரை ஆற்றி டம்ளரில் தனித்தனியாக ஊற்றி பஜ்ஜியோடு சுவைத்து மகிழுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 325

    0

    0