உங்க வீட்டு குட்டீஸூக்கு இனி வீட்டிலே செய்து தரலாம் கிரீம் பிஸ்கட்!!!

Author: Hemalatha Ramkumar
26 May 2022, 1:14 pm

குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றாலே ரொம்ப பிடிக்கும். அதிலும் க்ரீம் பிஸ்கட் மிகவும் விரும்பி ‌சாப்பிடுவர். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த பிஸ்கட் வீட்டிலேயே நாம் செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மைதா – 300(கிராம்)

கோக்கோ பவுடர் – 3 1/2 டேபிள்ஸ்பூன்

சமையல் சோடா – 1/2 டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்

பால் – 4 டேபிள்ஸ்பூன்

தேன் – 2 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை – 150(கிராம்)

வெண்ணெய் – 150(கிராம்)

க்ரீம் செய்ய தேவையானவை:

கோக்கோ பவுடர் -1 டேபிள்ஸ்பூன்

பொடித்த சர்க்கரை – 50(கிராம்)

வெண்ணெய் – 30(கிராம்)

செய்முறை:

* முதலில் மைதா, சமையல் சோடா, ஏலக்காய்த்தூள், கோக்கோ பவுடர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சலித்துக் கொள்ளவும்.

* பிறகு ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், பொடித்த சர்க்கரை சேர்த்துக் குழைய அடித்து, தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.

* பிறகு இதில் சலித்த மாவை கட்டிதட்டாமல் சேர்க்கவும். அடுத்து பால் சிறிதளவு தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

* பின்பு பிசைந்த மாவை வட்டமாக பிஸ்கட் கட்டர் அல்லது மூடியை வைத்து அழுத்தி வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* பிறகு பிஸ்கெட்டின் மேல் முள்கரண்டியால் லேசாக குத்தி சர்க்கரை தூவி ஓவனில் 180 டிகிரி சென்டி கிரேடில் 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.

*க்ரீம் செய்ய தேவையான வெண்ணெய், பொடித்த சர்க்கரை, கோக்கோபவுடர் எல்லாவற்றையும், ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு குழைய அடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*பிறகு பேக் செய்த பிஸ்கெட் இரண்டு எடுத்துக் கொள்ளவும். 2 பிஸ்கெட்களுக்கு நடுவே க்ரீம் தடவி மூடவும். இப்படியே எல்லா பிஸ்கெட்களையும் தயார் செய்யவும்.

* இப்போது சுவையான, டேஸ்டியான மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் க்ரீம் பிஸ்கெட் ரெடி.

  • வெட்கமே இல்ல? புது மருமகளை சக நடிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நாகார்ஜூனா!
  • Views: - 898

    0

    0