வீட்டில் செய்யக்கூடிய எளிமையான சுவையான ஸ்நாக்ஸ்: பட்டன் தட்டை!!!
Author: Hemalatha Ramkumar1 March 2023, 3:25 pm
தட்டை கேள்வி பட்டு இருக்கிறோம். அது என்ன பட்டன் தட்டை என்று தானே யோசிக்கிறீர்கள். இதுவும் தட்டைப் போன்றது தான். ஆனால், இது மினி வெர்ஷன். ஈவினிங் ஸ்நாக்ஸ் அல்லது விழாக் காலங்களில் இதனை செய்து அசத்துங்கள். வாருங்கள், இதன் செய்முறையைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 ஸ்பூன்
பச்சரிசி மாவு – 250 கிராம்
வெண்ணெய் – 1/4 ஸ்பூன்
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
எள்ளு – 1 ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் நாம் மேற்கூறிய பருப்பு வகைகளான பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை குக்கரில் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- குக்கர் விசில் அடங்கிய பின்னர் தண்ணீர் அதிகமாக இருந்தால், அதனை தனியாக எடுத்து வைத்து விட்டு, பருப்பை நன்றாக மசிக்க வேண்டும்.
- அதில் பச்சரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயம், உப்பு, எள்ளு, மிளகாய்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
- பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி தட்டை போல தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
- இந்தத் தட்டை சற்று தடிமனாக இருக்க வேண்டும். எனவே, அதற்கு ஏற்றவாறு தட்டிக் கொள்ளுங்கள்.
- அவ்வளவு தான் வாணலில் எண்ணெயை காய வைத்து பொரித்து எடுத்தால், சுவையான பட்டன் தட்டை ரெடி.
மாலை நேரத்தில் பட்டன் தட்டை உடன் காபி அல்லது டீ போட்டு சூடாக அருந்துங்கள்.
குறிப்பு:
- பிசைந்த மாவில், பூண்டி தட்டிப் போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
- ஒவ்வொன்றாக தட்டுவதற்கு சிரமமாக இருந்தால், நீங்கள் ஒரு கவரில் அந்த உருண்டைகளை சிறு இடைவெளி விட்டு அடுக்கி வைக்கவும். பின்னர் ஒரு சிறு கிண்ணத்தின் அடிப்பாகத்தைக் கொண்டு அந்த உருண்டைகளைத் தட்டையாக தட்டிக் கொள்ளலாம்.
- தட்டை நன்றான பதத்தில் வேக, எண்ணெய் நன்றாக காய்ந்த உடன், மிதமான தீயில் வைத்தால் அவற்றைப் பொரிக்கவும்.
Views: - 553
0
0