இந்த ரெசிபி டிரை பண்ணா நீங்க செய்யுற முட்டை குருமாவின் வாசனை தெருவெல்லாம் மணக்கும்!!!
Author: Hemalatha Ramkumar12 April 2022, 7:05 pm
முட்டை உலகம் முழுவதும் அதிகளவு மக்களால் உட்கொள்ளப்படும் ஆரோக்கியமான உணவாகும். முட்டைகள் அதிக சத்தானவை மற்றும் அவற்றை முழுவதுமாக உட்கொள்ளலாம். முட்டையை வைத்து குழம்பு வகைகள் மற்றும் முட்டை பொரியல், பொடிமாஸ் என பலவகை ரெசிபிகள் உண்டு. நாம் இன்று பார்க்க இருக்கும் ரெசிபி முட்டை குருமா. இந்த ரெசிபி எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வேகவைத்த முட்டை -4
எண்ணெய் -3 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் -ஒரு கைப்பிடி அளவு
பெரிய வெங்காயம் நறுக்கியது-1
வரமிளகாய் -3
இஞ்சி -1தேக்கரண்டி
பூண்டு -2தேக்கரண்டி
உப்பு-சுவைக்கு ஏற்ப
தக்காளி -3(நறுக்கியது)
மல்லித்தூள் -1தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -3தேக்கரண்டி
மஞ்சள்தூள் -1/2ஸ்பூன்
முந்திரி -5
தேங்காய் -3 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி -சிறிதளவு
சோம்பு-11/2 தேக்கரண்டி
மிளகு-1/2 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
பட்டை-2(துண்டு)
கிராம்பு -5
ஏலக்காய் -5
பிரியாணி இலை -1
அரைக்க:
அடுப்பில் வாணலியை வைத்து 1ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடானதும் அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி, வரமிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய அனைத்தையும் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்பு தேங்காய், சோம்பு, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி, கொத்தமல்லி ஆகிய அனைத்தையும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
*பின்பு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
*எண்ணெய் சூடானதும் பிரியாணி இலை, சோம்பு, வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.
*வதக்கிய பின் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சிறிதளவு சேர்த்து வதக்கவும்.
*பின் அரைத்த மசாலா விழுதுகள் உப்பு ஆகியவை சேர்ந்து நன்கு வதக்கவும்.
*வதக்கிய அனைத்தும் எண்ணெய் பிரிந்து வந்தவுடன் நான்கு முட்டைகளை கீறி சேர்க்கவும்.
*பின்பு மூடிப் போட்டு ஐந்து நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
0
0