வெறும் பத்தே நிமிடத்தில் செமயான ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
20 February 2023, 11:01 am

இன்னைக்கு ஈவ்னிங் என்ன ஸ்நாக்ஸ் செய்வது என்று குழப்பமாக உள்ளது 

தினமும் டீ குடிக்கும் போது, ஏதாவது சூடாக செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால், இதற்காக அதிக நேரம் செலவிட முடியாது. ஆகவே, உங்களுக்கு உதவ பத்தே நிமிடத்தில் ஒரு அருமையான ஸ்நாக்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு- 1கப் 

சர்க்கரை- ¼ கப் 

ஏலக்காய்- 2

நெய்- 2 தேக்கரண்டி 

எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு 

செய்முறை:

*முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் மைதா மாவை சேர்க்கவும்.

*சர்க்கரை மற்றும் ஏலக்காயை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து அதையும் மைதா மாவுடன் சேர்க்கவும். 

*இதனோடு நெய் ஊற்றி நன்கு கிளறவும். 

*தேவையான அளவு தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு கிளறி வைக்கவும்.

* இப்போது அடுப்பில் எண்ணெயை காய வைத்து கலந்து வாய்த்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிவக்க விட்டு எடுக்கவும்.

*அவ்வளவு சுவையான ஸ்நாக்ஸ் தயார். 

*தேவைப்பட்டால் முட்டை சேர்த்து கூட நீங்க மாவை கலந்து கொள்ளலாம்.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?