நெய் மைசூர் பாக் ரெசிபி: பார்த்தாலே எச்சில் ஊறுதுப்பா!!!
Author: Hemalatha Ramkumar19 December 2022, 10:37 am
மைசூர் பாகு பிடிக்காதவர்கள் கூட இந்த நெய் மைசூர் பாகு செய்து கொடுத்தால் நிச்சயமாக விரும்பி சாப்பிடுவார்கள். இதனை செய்வதற்கு நமக்கு மூன்றே பொருட்கள் இருந்தால் போதும். குறைவான பொருட்களை கொண்டு ருசியான நெய் மைசூர் பாகு எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க….
தேவையான பொருட்கள்:
கடலை மாவு- 1 கப்
நெய்- 150 ml
சர்க்கரை- 1 கப்
செய்முறை:
*நெய் மைசூர் பாகு செய்ய முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் விடவும்.
*அதில் ஒரு கப் கடலை மாவை சேர்த்து 4 – 5 நிமிடங்கள் நிறம் மாறி வரும் வரை வறுத்து கொள்ளவும்.
*பிறகு இந்த மாவை அப்படியே ஒரு சல்லடையில் போட்டு கட்டிகள் எதுவும் இல்லாமல் சலித்து எடுத்து கொள்ளலாம்.
*இதனோடு 150ml அளவு நெய்யை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
*இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.
*ஒரு கப் சர்க்கரையை அதில் போட்டு கலந்து விடவும்.
*சர்க்கரை முழுவதுமாக கரைந்த பிறகு நாம் கலந்து வைத்த கடலை மாவு மற்றும் நெய்யை இதில் ஊற்றவும்.
*மேலும் 2 – 3 தேக்கரண்டி நெய் ஊற்றி கிளறவும்.
*இவை அனைத்தையும் செய்யும் போது அடுப்பு மிதமான தீயில் இருப்பதை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.
*கடாயில் ஒட்டாமல் வரும் சமயம் அடுப்பை அணைத்து விடலாம்.
*ஒரு தட்டு அல்லது பாத்திரத்தில் நெய் தடவி செய்து வைத்த மைசூர் பாகினை அதில் கொட்டவும்.
*ஆறிய பின் துண்டுகளாக நறுக்கி சாப்பிட்டு மகிழுங்கள்.