நம்மில் பலருக்கும் பிடித்தமான ஒரு ஸ்வீட் தான் குளோப் ஜாமுன். இது பொதுவாக பேக்கரியில் விற்பனை செய்யப்படுகிறது என்றாலும், நம் வீட்டிலும் செய்து சாப்பிடலாம். பொதுவாக தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் எம்டிஆர் போன்ற பிராண்டுகள் பை 1 கெட் 1 ப்ரீ என்ற சலுகையில் குளோப் ஜாமுன் மாவை விற்பனை செய்வார்கள். ஆனால், குளோப் ஜாமுன் மாவு இல்லாமலும் நம்மால் வீட்டில் குண்டு குண்டான மென்மையான குளோப் ஜாமுன் செய்ய முடியும். அந்த இரகிசயப் பொருள் வேறு ஒன்றும் இல்லை, ரவை தான். ரவை உப்புமா என்றாலே வெறுக்கும் பலருக்கு இது கண்டிப்பாக சந்தோஷமளிக்கும். வீட்டில் ரவை இருக்கா, அபப்டியென்றால் உப்புமாவுக்கு பதில் குலாப் ஜாமுன் செய்யும்படி கேட்டு வாங்கி திருப்தியாக சாப்பிடலாம். சரி வாருங்கள், இது குறித்து விளக்கமாகப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ரவை – 1 கப்
பால் – 1 டம்ளர்
பேக்கிங் சோடா – 1 ஸ்பூன்
சர்க்கரை – (பாகு செய்வதற்கு)
தண்ணீர் – தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலை அடுப்பில் வைத்து சூடு ஆனதும் 1 கப் ரவையைப் போட்டு, 1 டம்ளர் பால் மற்றும் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கிளறி விடவும்.
நான்றாக கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் அடுப்பை ஆஃப் செய்து விட்டு ஒரு பின்ச் உப்பு சேர்த்து கிளறவும்.
கையில் எண்ணெய் அல்லது நெய் தடவி, மாவை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
அப்பொழுது தான் மென்மையான குளோப் ஜாமூனை உங்களால் ருசிக்க முடியும்.
அவற்றை உங்களுக்குத் தேவையான அளவில் உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் வாணலை வைத்து எண்ணெய் ஊற்றி அனைத்து உருண்டைகளையும் பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து, பாகு பதம் வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். உங்களுக்கு ஏலக்காய் பிடிக்கும் என்றால், அதனை ஜீராவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பொரித்த உருண்டைகளை ஜீராவில் போட்டு, மென்மையான குளோப் ஜாமுன்களை ருசித்து சாப்பிடுங்கள்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.