இன்றைய மாடர்ன் உலகில் பாரம்பரிய உணவுகள் பல நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து வருகின்றன. நம்முடைய முன்னோர்கள் சிறு தானியங்களை பல்வேறு உணவுகளாக செய்து சாப்பிட்டு வந்ததால் நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்தமாக நீண்ட ஆயுளை பெற்று வாழ்ந்து வந்தனர். ஆனால் நாமோ ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் என்று நம் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். வளர்ந்து வரும் நம்முடைய குழந்தைகளுக்காவது இனி ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க முயற்சி செய்வோம். அந்த வகையில் குதிரைவாலி அரிசியை வைத்து கிரிஸ்பியான அதே நேரத்தில் ஆரோக்கியமான தோசை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
செய்முறை
1 1/2 கப் குதிரைவாலி அரிசியை 4 முதல் 5 முறை தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து கழுவி ஒரு மணி நேரம் சுடுதண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஊறவைத்த அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனோடு 2 பச்சை மிளகாய், 2 இன்ச் அளவு இஞ்சி, ஒரு மணி நேரம் சுடு தண்ணீரில் ஊற வைத்த ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை, 6-7 ஊறவைத்து தோலுரித்த பாதாம் பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் கெட்டி தயிர், ஒரு கைபிடி அளவு கொத்தமல்லி தழை, ஒரு டீஸ்பூன் சீரகம், 3/4 டீஸ்பூன் கல் உப்பு ஆகியவற்றை சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி நீர் தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
இதையும் படிக்கலாமே: மூட்டு வலி பாடாய்படுத்துதா… உங்களுக்கான சிம்பிள் ஹோம் ரெமடீஸ்!!!
அதாவது ரவை தோசை சுடுவதற்கு மாவு கரைத்துக் கொள்ளும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
இப்போது தோசை கல்லை அடுப்பில் வைத்து அது சூடானதும் கரண்டியில் மாவு எடுத்து தோசையை ஊற்றவும்.
உங்களுக்கு பிடித்திருந்தால் தோசையை சுற்றி நெய் சேர்த்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் வழக்கம் போல எண்ணெய் பயன்படுத்தவும்.
இந்த தோசைக்கு தேங்காய் சட்னி அற்புதமான காம்பினேஷனாக இருக்கும்.
நாம் தயார் செய்த மாவில் கிட்டத்தட்ட 15 தோசைகளை ஊற்றி எடுக்கலாம். இந்த மாவை 2 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
This website uses cookies.