அல்சரை குணப்படுத்தும் ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம்!!!
Author: Hemalatha Ramkumar22 May 2022, 1:56 pm
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடிய நெல்லிக்காயை வைத்து சுவையான கமகமக்கும் ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம். உணவில் புளி சேர்த்துக் கொள்ள முடியாதவர்கள், அல்சர் உள்ளவர்கள் போன்றோர்க்கு ஏற்ற ரசம் இது. வைட்டமின் சி சத்து நிறைந்ததுள்ளது.
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் – 3( துருவியது)
பாசிப்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1டீஸ்பூன்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
தனியா – 1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
*முதலில் பாசிப்பருப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைத்து, மசித்து 3 கப் தண்ணீர் சேர்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
*ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், தனியா, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
* பின்பு பாசிப்பருப்பு தண்ணீருடன், துருவிய நெல்லிக்காய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
* பிறகு அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து தாளித்து ரசத்தில் ஊற்றவும்.
* பிறகு ரசம் நுரைத்து வரும் போது அடுப்பை அணைக்கவும்.
* இப்போது சுவையான, ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம் தயார்.
0
0