கோதுமை ரவை காய்கறி கிச்சடி: இத விட சிறந்த காலை உணவு இருக்க முடியுமா என்ன…???

Author: Hemalatha Ramkumar
23 May 2022, 2:25 pm

மிகவும் ஆரோக்கியமான கோதுமை ரவை கிச்சடி காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் இந்த கிச்சடி மிகவும் சுவையாக இருக்கும். இந்த கிச்சடியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 1
பச்சைமிளகாய் – 3
இஞ்சி – 1 டீஸ்பூன் (துருவியது) கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
கேரட் – 1
பீன்ஸ் – 3
முட்டைகோஸ் – சிறிதளவு
பட்டாணி – 1/4 கப்
குடைமிளகாய் – சிறிதளவு கொத்தமல்லி தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
புதினா – சிறிதளவு

செய்முறை:

*முதலில் 2 கப் கொதித்த நீரில் கோதுமை ரவையை போட்டு மூடி வைத்து ஊறவிடவும்.

*அடுத்து, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம், மஞ்சள்தூள், தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

* பிறகு, நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் சேர்க்கவும். அடுத்து கொத்தமல்லி தழை மற்றும் புதினா சேர்த்து உப்பு போட்டு நீர் விட்டு வேகவிடவும்.

* முக்கால் பதம் வெந்ததும் ஊறிய கோதுமை ரவையைச் சேர்த்துக் கிளறவும்.

* நன்கு வெந்ததும் நெய் சேர்த்து இறக்கி விடவும்.

* விருப்பப்பட்டால் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

* சுவையான, ஆரோக்கியமான இந்த வெஜிடபிள் கோதுமை ரவை கிச்சடியுடன் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1173

    0

    0