என்ன தான் பல விதமான சைட் டிஷ் இருந்தாலும், ஒரு சிலருக்கு இட்லி, தோசைக்கு பொடி இல்லாமல் உள்ளே இறங்காது. இட்லி பொடியில் ஏராளமான வகைகள் உண்டு. அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது திருநெல்வேலி ஸ்பெஷல் இட்லி பொடி. இதற்கு மூன்றே பொருட்கள் இருந்தால் போதும். இப்போது இந்த அசத்தலான இட்லி பொடியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இந்த இட்லி பொடி செய்ய முதலில் ஒரு கப் கருப்பு உளுந்து எடுத்துக் கொள்ளவும். வெள்ளை உளுந்து பயன்படுத்தியும் செய்யலாம். ஆனால் கருப்பு உளுந்து பயன்படுத்தி செய்வது சிறப்பு. அடுத்து நமக்கு 1/2 கப் கருப்பு எள் மற்றும் பத்து வர மிளகாய் தேவைப்படும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து உளுந்து சேர்த்து வறுக்கவும். உளுந்து நன்கு சிவந்து வந்ததும் அதனை தனியாக ஒரு தட்டில் கொட்டி வைக்கவும். பின்னர் எள் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
எள் வறுப்பட்டு வெடிக்கும் போது அடுப்பை அணைத்து அதனையும் தட்டில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். பொருட்களை வறுக்கும்போது அடுப்பை குறைந்த தீயில் வைக்க வேண்டும். இல்லையெனில் பொருட்கள் கருகிவிடும்.
அடுத்தபடியாக ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி 1/2 தேக்கரண்டி பெருங்காயத் தூள் சேர்க்கவும். பின்பு வர மிளகாய் சேர்த்து வறுக்கவும். வர மிளகாய் வறுப்பட்டவுடன் ஏற்கனவே வறுத்து வைத்த உளுந்து மற்றும் எள்ளை சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் வறுத்து அடுப்பை அணைத்து கொள்ளலாம்.
இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் உப்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து பொடியாக அரைக்கவும். பின்னர் உளுந்து மற்றும் எள் சேர்த்து அரைக்கவும். இதனை பல்ஸ் மோடில் தான் அரைக்க வேண்டும். இல்லையென்றால் எள்ளில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்துவிடும். பொடியை அரைத்ததும் தட்டில் கொட்டி ஆற வைத்து ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். அவ்வளவு தான், காரசாரமான திருநெல்வேலி இட்லி பொடி தயார்.
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
This website uses cookies.