நெக்ஸ்ட் டைம் இனிப்பு சாப்பிடணும் போல இருந்தா இந்த இளநீர் பாயாசம் ட்ரை பண்ணி பாருங்க… அடிக்கடி செய்ய ஆரம்பிச்சுடுவீங்க!!!
Author: Hemalatha Ramkumar1 October 2024, 7:27 pm
பொதுவாக விசேஷம் என்றாலே நாம் பருப்பு பாயாசம் அல்லது சேமியா பாயாசம் செய்வது வழக்கம். ஆனால், சற்று வித்தியாசமாக முயற்சிக்க நினைத்தால் நீங்கள் இளநீர் பாயாசம் செய்து அசத்தலாம். இதனை பத்தே நிமிடங்களில் சுலபமாக செய்துவிடலாம்.
தேவையான பொருட்கள்:
இளநீர் வழுக்கை – 3/4 கப்
இளநீர் தண்ணீர் – 1 கப்
பால் – 1/2 லிட்டர்
ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை
கண்டென்ஸ்ட் மில்க் – 3 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
முந்திரி, பாதாம், திராட்சை – சிறிது
செய்முறை:
*பாலைக் கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கெட்டியாக விடவும்.
*பாலை இறக்கி நன்றாக குளிர வைக்கவும்.
*இளநீர் வழுக்கை மற்றும் இளநீர் தண்ணீரை ஒன்றாக சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
*நெய்யில் பாதாம், முந்திரி, திராட்சையை வதக்கிக் கொள்ளவும்.
*அரைத்து வைத்ததை பாலில் சேர்க்கவும்.
*அதில் கண்டென்ஸ்ட் மில்க், ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வதக்கிய பாதாம், முந்திரி, திரட்சியை சேர்த்து சில்லென்று பருகவும்.
குறிப்பு:
பால் நன்றாக ஆரிய பின்னரே அதில் அரைத்து வைத்ததை சேர்க்க வேண்டும். பாலை பிரிட்ஜில் வைத்தும் சேர்க்கலாம். பாலுக்கு பதில் தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம். இது எளிதில் கெட்டுப்போகும் என்பதால் அதே நாள் பருகுவது நல்லது.