வீட்ல காய்கறி நிறைய மீந்துபோச்சா… அத வேஸ்ட் பண்ணாம இந்த மாதிரி சாம்பார் பண்ணீடுங்க!!!

Author: Hemalatha Ramkumar
13 April 2022, 7:15 pm

சாம்பாரில் பல வகை உண்டு. நாம் இன்று பார்க்க இருக்கும் ரெசிபி கதம்ப சாம்பார். இந்த சாம்பார் இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும். இப்போது கதம்ப சாம்பார் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் -1
கத்தரிக்காய் -3
மாங்காய் -1
பீன்ஸ் -4
கேரட் -1
அவரைக்காய் -3
உருளைக்கிழங்கு -1
வெங்காயம் -2
தக்காளி -2
பச்சை மிளகாய் -2
பூண்டு -3பல்
துவரம்பருப்பு -200(கிராம்)
மஞ்சள்தூள் -2சிட்டிகை
சாம்பார் தூள் -2டேபிள்ஸ்பூன்
கடுகு -1டீஸ்பூன்
உளுந்து -1டீஸ்பூன்
சீரகம் -1டீஸ்பூன்
வெந்தயம் -கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -கால் டீஸ்பூன்
புளிச்சாறு -2டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி-சிறிதளவு
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு

வேகவைக்க:
குக்கரில் துவரம்பருப்பு, வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சைமிளகாய், மஞ்சள்தூள், சிறிதளவு சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தாளிக்க :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெந்தயம், உளுந்து, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், சாம்பார்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

செய்முறை:
*பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் வேகவைத்த பொருட்களுடன் நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.

*பின்பு சாம்பார்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

*காய்கறிகள் நான்றாக‌ வெந்தவுடன்.புளிக்கரைசலை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

*பின் தாளித்த பொருட்கள் அனைத்தும் சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!