சிக்கன் வைத்து பல வகையான உணவுகளை நாம் சமைக்கலாம். சிக்கன் என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் இன்று நாம் பார்க்க இருப்பது சுவையான மலாய் சிக்கன்.
இப்போது இந்த மலாய் சிக்கன் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன்- 1/2 கிலோ
தயிர்- 5 தேக்கரண்டி
கரம் மசாலா- 2 தேக்கரண்டி
பூண்டு- 4
இஞ்சி- ஒரு துண்டு
வெங்காயம்- 4
மிளகுத்தூள்- 2 தேக்கரண்டி
சீரகம்- 2 தேக்கரண்டி
தனியா- 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய்- 3
வெண்ணெய்-
ஃபிரஷ் கிரீம்- 3 தேக்கரண்டி
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
*மலாய் சிக்கன் செய்வதற்கு முதலில் இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.
*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.
*இதனோடு வெண்ணெய் சேர்த்து கொள்ளலாம்.
*வெண்ணெய் உருகியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
*பின்னர் வெங்காய விழுதை சேர்த்து கலக்கவும்.
*அடுத்து சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.
*இதனுடன் தயிர், கரம் மசாலா, சீரகத்தூள், மிளகுத்தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
*பத்து நிமிடங்கள் இதனை வேக வைத்து கொள்ளலாம்.
*கடைசியில் பச்சை மிளகாய், ஃபிரஷ் கிரீம், வெண்ணெய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் இருக்கட்டும்.
*அவ்வளவு தான்… சுவையான மலாய் சிக்கன் ரெடி.