வாய்ப்புண்களை ஒரே நாளில் குணப்படுத்தும் மணத்தக்காளி கீரை சூப் ரெசிபி!!!
Author: Hemalatha Ramkumar14 May 2022, 1:47 pm
வயிற்று புண், வாய்ப்புண் உள்ளவர்கள் இந்த மணத்தக்காளி சூப் செய்து சாப்பிட்டால் விரைவில் குணமாகும். மணத்தக்காளி உடல் சூட்டை தணிக்கும். மணத்தக்காளியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள். மணத்தக்காளி சூப் மிகவும் சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி – 1( கட்டு)
பாசிப்பருப்பு – 50 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 1
வரமிளகாய் – 2
பூண்டு – 2 பற்கள்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1டீஸ்பூன்
சீரகம் – 1டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
தேங்காய் – அரை மூடி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
*முதலில் மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து அதில் ஒரு வெங்காயம், தக்காளி, பாசிப்பருப்பு, பூண்டு , சீரகம் அரை டீஸ்பூன் , தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
* அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சோம்பு, கசகசா சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
* பின்பு அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
* பின்பு அந்த தாளிப்பை கீரையுடன் சேர்த்து கிளறி விட்டு இறக்கி விடவும்.
* இப்போது சுவையான, கமகமக்கும் மணத்தக்காளி கீரை சூப் தயார்.
* இந்த மணத்தக்காளி சூப்பை சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். இதனுடன் வறுவல் அல்லது வத்தல் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.