பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு ஏற்ற சுவையான சைடிஸ். நிறைய பேர் கடைகளில் வாங்கி சாப்பிடுகின்றனர். ஆனால், வீட்டிலேயே ஆரோக்கியமாகவும், சுவையாகவும், செய்யலாம். சப்பாத்தி மட்டுமின்றி நாண், புலாவ், ப்ரைடு ரைஸ், போன்ற ரெசிபிகளுக்கு சைடிஸாகவும் சாப்பிடலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பன்னீர் பட்டர் மசாலாவை எளிமையான முறையில் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் – 200(கிராம்)
வெங்காயம் – 2
தக்காளி – 3
பூண்டு – 3 பற்கள்
முந்திரி – 7
பச்சைமிளகாய் – 2
இஞ்சி – 1 இன்ச்
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பால் – 1 கப்
வெண்ணெய் – 3 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
கஸ்தூரிமேத்தி – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
*முதலில் வெதுவெதுப்பான நீரில் பன்னீரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
*பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சைமிளகாய், இஞ்சி, முந்திரி சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
*பிறகு, வதக்கிய மசாலாவை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
*பின்பு, அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் சேர்க்கவும். பின்பு, அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
*வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
*பிறகு, வதக்கிய மசாலா கலவை எண்ணெய் பிரிந்து வந்ததும்.
*பன்னீர் மற்றும் பால் சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடம் கழித்து கஸ்தூரிமேத்தி சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின், எண்ணெய் பிரிந்து வந்ததும். சிறிதளவு வெண்ணெய் மற்றும் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
*இப்போது, சுவையான, ஆரோக்கியமான பன்னீர் பட்டர் மசாலா தயார்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.